பொது செய்தி

தமிழ்நாடு

6 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : வேலுார், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' தமிழகம் மற்றும் புதுச்சேரியில், காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும். வளிமண்டலத்தின் கீழ்
சென்னை வானிலை மையம், பாலச்சந்திரன், கனமழை வாய்ப்பு, காற்றழுத்த தாழ்வு நிலை, வளிமண்டல மேலடுக்கில் தாழ்வு நிலை

சென்னை : வேலுார், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' தமிழகம் மற்றும் புதுச்சேரியில், காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும். வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தாழ்வுநிலையால், வடதமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்ள உள்மாவட்டங்களில் இந்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விடவும் 31 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

இதே காலத்தில், 9 செ.மீ., வரை பெய்திருக்கவேண்டிய மழை, தமிழகத்தில் 6 செ.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
21-ஜூலை-201906:31:34 IST Report Abuse
kalyanasundaram his statements are approximate. india need sophisticated weather fore ing equipment as in foreign countries . but we have prehistoric equipments. hence foreing will totally be a failure attempt
Rate this:
Cancel
joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூலை-201918:11:51 IST Report Abuse
joy சென்னை ஆய்வு மையம் கூறும் கணிப்புகளை, மக்கள் யாரும் பொருட்படுத்துவதில்லை. பெரும்பாலான கணிப்புகள் , வாய்ப்பு உள்ளது, வரக்கூடும் என்று பொத்தாம் பொதுவாக கணிப்புகள் இருக்கும், வர்ற மழையும் வராது.
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
16-ஜூலை-201916:47:58 IST Report Abuse
R S BALA அப்போ சென்னை ,திருவள்ளூர் பின்கோடு இருக்கிற மாவட்டத்துல மழை பெய்யாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X