மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்தது: பலி 12 ஆக உயர்வு

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (11)
Advertisement

மும்பை: மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதனால், உயிரிழப்பு அதிகரிக்கலாம எனக்கூறப்படுகிறது.







மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 'கவுசர்பாக்' என்ற நான்குமாடி குடியிருப்பு கட்டடம் இன்று(ஜூலை 16) திடீரென சரிந்து விழுந்தது. இதில் 40 முதல் 50 பேர் வரை சிக்கியிருந்தனர். சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.





இந்த கட்டடம் உள்ள பகுதி மிகவும் குறுகியது என்பதால், ஜேசிபி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.







பிரதமர் இரங்கல்


பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில் ,மும்பை கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து மிக கவலையுற்றேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.




Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
16-ஜூலை-201918:49:55 IST Report Abuse
GB.ரிஸ்வான் வேதனையான சம்பவம் ஆழ்ந்த அனுதாபங்கள் அப்பாவி ஏழை நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் பலியாகிறார்கள் .... இப்படி ஒரு சம்பவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற கட்சிமாறி சட்டமன்ற உறுப்பினர்களை கடத்தி தங்கவைக்கப்படுகிற ரிசார்ட்டில் நடந்தால் நன்றாக இருக்கும் செத்து ஒழியட்டும் என நிம்மதியாக இருக்கும்... அடுத்த முறை ஒரு பயம் வரும் .... எல்லா கட்டிடங்களையும் பராமரிப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
16-ஜூலை-201917:44:37 IST Report Abuse
BoochiMarunthu இந்த அரசு மகாராஷ்டிரா அரசு வீட்டு வசதி வாரியம் பராமரிக்கும் கட்டிடம் . பிஜேபி அரசு ஒரு ரயில்வே நடைபாதை , கட்டிடம் கூட பராமரிக்க தகுதி இல்லாதது . இதை பார்க்கும்போது தமிழ்நாடு 100 மடங்கு மேல் .
Rate this:
Share this comment
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
16-ஜூலை-201919:58:09 IST Report Abuse
Loganathan Kuttuvaதமிழகத்தில் இதை விட மோசமான கட்டிடங்கள் அதிகம் உள்ளன.மும்பை அளவிற்கு இங்கு மழை பெய்வதில்லை....
Rate this:
Share this comment
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
16-ஜூலை-201915:29:07 IST Report Abuse
sridhar ஒவ்வொரு மழை காலத்திலும் இம்மாதிரி நடக்கின்றது இதற்கு நாம் யாரையும் குறை கூற முடியாது ஏன் எனில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் இன்னமும் இருப்பதால் அதிலும் மக்களால் அதிகம் வசிக்கப்படும் பகுதியாகவும் இருப்பதால் ஒவ்வொரு வருடமும் இது நடக்கிறது பழைய கட்டிடங்களை இடியுங்கள் என்றால் தான் மக்கள் கோர்ட் கு போயி ஸ்டே ஆர்டர் வாங்கிடுறாங்களே அப்புறம் வேற என்ன பண்ண முடியும் எதிர்கொள்ள வேண்டியதுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X