பொது செய்தி

இந்தியா

வெள்ளப் பெருக்கு; 43 லட்சம் பேர் தவிப்பு

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

கவுகாத்தி : பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கால், அசாமில், 43 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி செய்வதறியாது தவிக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



latest tamil news




வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் ஜீவநதியான பிரம்மபுத்ராவில் பெரும் வெள்ளம் பாயந்தோடுகிறது.


43 லட்சம் பேர் தவிப்பு


அசாமில், இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். 43 லட்சம் பேர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். இதுவரை 40 ஆயிரம் பேர் 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உறைவிட வசதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news




இன்னும் பல லட்சம் பேரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைளை தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் எடுத்து வருகிறார்கள். வெள்ளத்தால் அசா மாநிலம் தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பர்பேட்டா என்ற மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 5 லட்சம் பேர் வாழ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


83 கிராமங்கள் மூழ்கின


மோரன் என்ற மாவட்டத்தில் 83 கிராமங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் அங்கு மொத்தமாக வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். அசாம் மாநிலத்தில் உள்ள 10 நதிகளின் நீர் மட்டமும் அதிகமாக உயர்ந்து உள்ளது. இதனால் தேமாஜி, லகீம்பூர் உள்ளளிட்ட பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.


latest tamil news




அசாம் மாநிலத்தின் தபபில் மற்றும் சிராங் கிராமங்கள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மக்கள் வீடுகளை இழந்து, உணவின்றி பசி, பட்டினியுடன் தவிக்கின்றனர். நிவாரணப் பணிக்கான அதிகாரிகள் எவரும் கடந்த 2 நாட்களாக வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.


காசிரங்கா பூங்கா மூழ்கியது


அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், காசிரங்கா தேசிய பூங்காவின் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில் ஏராளமான வனவிலங்குகள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.


23 விலங்குகள் உயிரிழப்பு


வெள்ளத்தில் சிக்கி இதுவரை 23 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விடுமுறையில் சென்ற அனைத்து வனத்துறை அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டு, விலங்குகளை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-201918:39:01 IST Report Abuse
ஆப்பு வீட்டுக்கு வீடு குடிநீர் என்ன குளமே தந்துட்டோம். முதல் கட்டமச்க அசாமில் தண்ணீர் பிரச்னை தீர்த்து விட்டோம். சாரி... அதே தீர்ந்து போச்சு. அடுத்து தமிழ்நாடு தான்.
Rate this:
Cancel
RAMESH BABU K R - doha,கத்தார்
16-ஜூலை-201917:30:47 IST Report Abuse
RAMESH BABU K R நதிகளை இணைக்கும் பணியால் என்ன பயன்
Rate this:
Cancel
RAMESH BABU K R - doha,கத்தார்
16-ஜூலை-201917:29:50 IST Report Abuse
RAMESH BABU K R தமிழ் நாட்டில் தண்ணி இல்லை வட இந்தியாவில் வெள்ளம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X