அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுகவின் அம்மியும், அதிமுக மம்மியும்!

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (28)
Advertisement

சென்னை : ஆடிக்காற்றில் அம்மி பறப்பதைப் போல், அதிமுக ஆட்சியும் பறந்து போய் விடும் என்று சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ கூறியதற்கு அதனால் தான் அம்மிக்கு பதில் மிக்சி வழங்கப்படுவதாகவும், எப்போதும் தமிழகத்தில் மம்மி ஆட்சிதான் என்றும் எதுகை, மோனையில் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.






ஆடிக்காற்றில் அம்மி பறக்குமா?

சுகாதாரத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ., பூங்கோதை, தனது பேச்சின் இறுதியில், ஆடிக்காற்றில் அம்மி பறக்கும் என்பது பழமொழி ; அது போல ஆடிக் காற்றில் இந்த ஆட்சியும் பறக்கும் என கூறி முடித்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆடிக் காற்றும் அடிக்காது, அம்மியும் பறக்காது, அம்மாவின் ஆட்சி எப்போதும் அகலாது என்றார்.





அம்மிக்கு பதிலாக மிக்ஸி :

பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்த அரசு அம்மிக்கு பதிலாக ஏற்கனவே மிக்ஸி கொடுத்துவிட்டது என்றும் பழைய பழமொழி இப்போது பொருந்தாது என்றார். தமிழகத்தில் எப்போதும் அம்மாவின் ஆட்சி தான் எனப் பொருள்படும் வகையில் மம்மி ஆட்சி தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை அடுத்து அவையில் சிரிப்பொலி எழுந்தது.





ஜெயக்குமார் :

அவ்வப்போது கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்விகளை தங்களது கட்சி வெற்றிக்கு பொருத்துவது, பழைய சினிமா பாடல்களை பாடி திமுகவை தாக்குவது, தினகரனை கிண்டலடிப்பது என்று கலாய்த்து வரும், ஜெயக்குமார், இன்றைக்கு அம்மி, மம்மி விவாதத்திலும் சிக்ஸர் அடித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-ஜூலை-201913:48:45 IST Report Abuse
Malick Raja தமிழக அமைச்சர்கள் யாருக்காவது ஒருவருக்கு தன்மானம் இருக்கிறதா என்றால் இல்லை ..
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-ஜூலை-201913:47:38 IST Report Abuse
Malick Raja தமிழக அமைச்சர்கள் யாராவது ஒருவருக்கு தன்மானம் இருக்கிறதா என்றால் இல்லை .. ஏனென்றால் அனைவரும் முதலில் ஜெயாவின் காலில் விழுந்து பின்னர் சசி காலில் ஊர்ந்தும் தவழ்ந்துமல்லவா பதவியை பெற்றார்கள் .. தமிழக அமைச்சர்கள் தன்மானமற்றவர்கள் என்று சொல்வதே சிறப்புக்குரியது ..
Rate this:
Share this comment
Cancel
17-ஜூலை-201908:15:15 IST Report Abuse
Boopathi Subramanian தங்கள் ஆட்சி அம்மாவின் பிச்சை. அவர் இல்லாமல் நீங்கள் வீண்.எனவே தங்கள் ஆட்சி விரைவில் முடித்து வைக்கப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X