தபால் துறை தேர்வு: தமிழில் எழுதலாம்

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (51)
Share
Advertisement
தபால்துறை தேர்வு, மத்திய அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம்,

புதுடில்லி: கடந்த ஞாயிற்றுக்கிழமை( ஜூலை 14) நடந்த தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மேலும், இனி வரும் நாட்களில், தமிழ் உட்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறை தேர்வு நடத்தப்படும் எனக்கூறியுள்ளார்.

தபால் துறை போட்டி தேர்வுகள், தமிழ் உட்பட, அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தன. இனிமேல், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தபால் தேர்வு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், தேர்வை நடத்த அனுமதி வழங்கியது. ஆனால், தேர்வு முடிவை வெளியிட தடை விதித்தது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை14) தேர்வு நடந்தது.


latest tamil news




இந்நிலையில், தபால்துறையின் முடிவை கண்டித்து ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பதிலில், கடந்த 14ம் தேதி நடந்த தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனிமேல், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
17-ஜூலை-201904:14:14 IST Report Abuse
Anandan இந்த பிஜேபி ஆட்களுக்கு எதை எப்படி செய்ரதுனு தெரியலைப்போல. இருக்குறதுல ஒரு பிரச்சினை பண்ணவேண்டியது அப்புறம் பின்வாங்க வேண்டியது, இதெல்லாம் ஒரு பொழப்பு?
Rate this:
Cancel
Subramanian Marappan - erode,இந்தியா
16-ஜூலை-201921:17:42 IST Report Abuse
Subramanian Marappan அஞ்சல் அலுவலகம் மத்திய அரசு நிறுவனம்.அங்கு தமிழ் மொழியில் எந்தவித கடித போக்குவரத்தும் இல்லை .ஆங்கிலத்திலேதான் விடுப்பு கடிதம் கூட கொடுக்கப்பட வேண்டும்.தமிழ் புலமை உள்ளவர்களால் ஆங்கில அறிவு அறவே இல்லாமல் பணி செய்ய இயலுமா?ஏன் புரிந்து கொள்ளாமல் ஊளை இடுகிறார்கள்?
Rate this:
Anandan - chennai,இந்தியா
17-ஜூலை-201904:06:38 IST Report Abuse
Anandanஅப்புறம் எதுக்கு ஹிந்தி மட்டும் தேர்வில். தமிழில் தேர்வெழுதுபவர்களுக்கு ஆங்கில அறிவு இருக்காதென்றால் ஹிந்தியில் எழுதுபவர்களுக்கு....
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூலை-201921:15:44 IST Report Abuse
தமிழ்வேல் மொழி விவகாரத்தில் ஒவ்வொருதடவையும் இப்படியா ? ஜான் ஏறுனா முழம் சறுக்குதே ... இதை எல்லாம் முன்னாலேயே யோசிக்க முடியாத சப்ஜெக்டா ? இதுலேருந்து தெரிஞ்சிக்கவேண்டியது என்னவென்றால் OK ஆகிடாதான்னு முயற்சி பண்ணி பார்க்கிறானுவோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X