'ஆப்சென்ட்' அமைச்சர்கள்: கேட்கிறார் மோடி

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
PM, Absentee Ministers, Parliament Duty, Sources, பார்லிமென்ட், அமைச்சர்கள், பிரதமர் மோடி

புதுடில்லி: பார்லிமென்ட் தொடர் நடக்கும் நாட்களில், அவைக்கு வராத அமைச்சர்களின் பட்டியலை அளிக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும், பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசும்போது, பார்லிமென்ட் கூட்டங்களில் அனைத்து எம்.பி.,க்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவுரை வழங்கியிருந்தார்.


latest tamil news




இந்நிலையில், பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பார்லிமென்ட் தொடர் நடக்கும் போது, அவைக்கு வராத அமைச்சர்களின் பெயரை அளி்கும்படி, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news




மேலும், எம்.பி.,க்கள் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். தண்ணீர் பஞ்சம் உள்ள பகுதிகளில், எம்.பி.,க்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். எம்.பி.,க்கள் தனித்துவமான பணிகளை மேற்கொள்வதுடன், உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து சமூக பணிகளில் ஈடுபட வேண்டும். காசநோய் மற்றும் தொழுநோய்களை ஒழிக்க அனைத்து எம்.பி.,க்களும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஜூலை-201916:24:16 IST Report Abuse
இந்தியன் kumar மந்திரி பதவியை ஒழுங்காக கவனிக்க முடியாதவர்கள் தங்களாகவேய பதவி விலகி விடுவது நல்லது அப்படி யாரவது இருக்கிறார்களா என்ன ???
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஜூலை-201916:22:52 IST Report Abuse
இந்தியன் kumar தமிழகம் ஒரு நல்ல பிரதமரை புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது .
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூலை-201900:03:54 IST Report Abuse
Pugazh V பட்ஜெட் விவாதத்தில் ப.சிதம்பரம் பேசும் போது அமைச்சரே அவையில் ஆப்ஸென்ட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X