கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதா: மத்திய அரசு விளக்கம்

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (22)
Advertisement
NEET exam,medical entrance test,நீட், சென்னை ஐகோர்ட், மத்திய அரசு, தமிழக அரசு

சென்னை: நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதா, 2017 செப்., மாதமே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாக, சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.

நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக அரசின் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறையை பூர்த்தி செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்ம் எனக்கூறி, தமிழக மாணவர்கள் - பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர், அருமைநாதன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, கனகசுந்தரம், முஸ்தபா ஆகியோர், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்கள், நீதிபதிகள், எஸ்.மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய,'டிவிஷன் பெஞ்ச்' முன், ஜூலை 6 ல்விசாரணைக்கு வந்தன.
மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர், ஆதி.குமரகுரு ஆஜராகி வாதிடுகையில் :
''மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து, கடிதம் வந்துள்ளது. ''அதில், தமிழகத்தில் இருந்து, 2017 பிப்ரவரியில், இரண்டு சட்ட மசோதாக்கள் வந்தன. அவற்றை, 2017 செப்டம்பரில், ஜனாதிபதி நிறுத்தி வைத்துள்ளார் என, கூறப்பட்டுள்ளது,'' என்றார்.மேலும், ''மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா; நிராகரிக்கப்பட்டனவா என, விளக்கம் கோரியதற்கு, அந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது,'' என்றும், தெரிவித்தார். அதற்கான கடிதங்களையும், நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.


மத்திய அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டதை பதிவு செய்த நீதிபதிகள், மசோதாக்கள் பெறப்பட்ட விபரங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதி விபரங்களை, மனுவாக தாக்கல் செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சக செயலருக்கு உத்தரவிட்டனர். விசாரணையை, இன்றைக்கு(ஜூலை 16) தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மத்திய உள்துறை துணை செயலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நீட் விலக்கு மசோதா 2017 ல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. 2017 பிப்வரியில் கிடைத்த மசோதாவை, அதே ஆண்டு செப்டம்பரில் ஜனாதிபதி நிறுத்தி வைத்தார். இதனை தொடர்ந்து அந்த மசோதா செப்.,மாதமே தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது எனக்கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Sakthi - Nemathanpatti,இந்தியா
17-ஜூலை-201914:34:31 IST Report Abuse
Narayanan Sakthi அப்போ கொலையை பண்ணினா தப்பேயில்லை அதுதான் சாட்சியே இல்லாமல் பண்ணனும். அப்படித்தானே?
Rate this:
Share this comment
Cancel
Raj - coimbatore,இந்தியா
16-ஜூலை-201921:27:23 IST Report Abuse
Raj 10 - 12 கற்று தரும் கணித, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆசிரியர் முதலில் NEET மற்றும் இன்ஜினியரிங் நுழைவு தேர்வு எழுதி அவர்களுடைய பணியை தக்க வைத்துக்கொள்ளட்டும். NEET தேர்வு தேறாத ஆசிரியர்கள் மீண்டும் 5 - 9 வகுப்புகளுக்கு மாற்றப்பட்டு, மறு தேர்வுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். வருடத்துக்கு 4 முறை நீட் தேர்வு நடத்தப்படவேண்டும். மாணவர்களுக்கு NEET பயிற்சி வகுப்பு எடுத்துக்கொள்ள மானியம் வழங்கப்படவேண்டும். NEET தேர்வை மாணவர்கள் 11 வகுப்பிலேயே எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மாணவர்கள் ஒரு முறைக்கு இரு முறை எழுதி தங்கள் மதிப்பெண்களையும் தகுதியையும் வளர்த்துக்கொள்ள உதவும். ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு வைத்து அவர்களுடைய தகுதி நிர்ணயம் செய்யும் போது மாணவர்களுடைய தேர்ச்சி விகிதம் மற்றும் மாணவர்களிடம் நடத்தப்படும் கருத்து கணிப்பை கொண்டே முடிவு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201920:27:41 IST Report Abuse
Dr.C.S.Rangarajan மருத்துவ கல்விக்கு நீட் தேர்வுமுறைபோல, சட்ட மற்றும் பல தொழில் சார்ந்த கல்வி பயில தேர்வுமுறைகள் வருதல் அவசியம். கல்வி பயிலுவதற்கு தேர்வுமுறை அவசியம் இல்லை என்றால், கல்வி பயின்றபின் தொழிலை தொடங்க தேர்வு ஒன்றில் தகுதி பெறவேண்டும் என தேர்வு ஒன்றினை அறிமுகப்படுத்துதல் அவசியம். ஆராய்ச்சி பட்டம் போட்டபின், கல்லூரிகளிலும், பல்கலை கழகங்களிலும் பேராசிரியராக பணிபுரிய தேர்வு ஒன்றினில் வெற்றிபெறவேண்டும் என்ற முறை இருப்பதுபோல், எல்லா தொழில் சார்த்த கல்விமுறைக்கும் தேர்வுகள் அறிமுகப்படுத்தல் வேண்டும்.
Rate this:
Share this comment
Raj - coimbatore,இந்தியா
16-ஜூலை-201922:10:52 IST Report Abuse
Rajநீங்கள் சொன்னதை நடைமுறைப்படுத்தினால் நாடு முன்னேறி விடும். அரசு அலுவலகங்களிலும் ஒவ்வொரு அலுவலருக்கும், அவர்கள் எவ்வளவு வேலை செய்துள்ளனர், எவ்வளவு கோப்புகளை தேக்கி வைத்துள்ளனர் என்று கணக்கிட்டு பணி உயர்வு/தாழ்வு கொடுக்க வேண்டும். மக்கள் தொடர்புடைய அலுவலர்கள், மக்களுக்கு எவ்வளவு உதவிகரமாக உள்ளனர் என்று பயனாளிகளிடம் கருத்து கணிப்பு நடத்த வேண்டும். அதனடிப்படையிலேயே அவர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். மக்கள் ஒரு விண்ணப்பத்தை அளித்தால் உடனடியாக அதற்கு உண்டான அத்தாட்சியையும், அந்த விண்ணப்பத்திற்கு உண்டான அரசு கோப்பு எண்ணையும் (tracking / case number ) கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எந்த துறைகளில் எவ்வளவு விண்ணப்பங்கள் தேங்குகின்றன என்று தெரியும். அதை கொண்டு அங்கிருக்கும் அலுவலர்களை நெறி படுத்த முடியும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X