மோடியிடம் சமாதான கொடி: கெஜ்ரி தடாலடி

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
Kejriwal, surrender, PMModi,aap, BJP, Aam adhmi, கெஜ்ரிவால், பிரதமர் மோடி, பா.ஜ., பாஜ, ஆம் ஆத்மி, சமாதான கொடி,

புதுடில்லி: பிரதமர் மோடியுடன் கடுமையாக மோதி வந்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இப்போதெல்லாம் வாயே திறப்பதில்லை. மோடியுடன் அவர் சமாதானமாக சென்றுவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியை கெஜ்ரிவால் சந்தித்த பின்னர் இந்த சந்தேகம் எழுந்துள்ளது. மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அரைமணி நேரத்திற்கு மேல் நீடித்தது.

ஒரு காலத்தில் அரசியல் எதிரியாக இருந்த கெஜ்ரிவாலுடன், தற்போது, மோடி சுமூகமான உறவை கொண்டுள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன. மோடியை சந்தித்த பிறகு, பா.ஜ., மீதான கெஜ்ரிவாலின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மோதல் குறைந்துள்ளதை காட்டும் வகையில் கெஜ்ரிவால், பா.ஜ., குறித்து கவனமாக பேசி வருகிறார். சமீப காலமாக, மத்திய அரசை எதிர்ப்பதையும், டில்லி விவகாரத்தில் மத்திய மற்றும் டில்லி அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து பேசுவதையும் கெஜ்ரிவால் நிறுத்தியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் டில்லியில் நாட்டின் பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் இணைந்து கெஜ்ரி பங்கேற்றார். ஊழல் அதிகாரிகளை பதவியில் இருந்து அனுப்ப வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை. இதன்படி, டில்லி அரசில் உள்ள ஊழல் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பவது குறித்து டில்லி ஆளுநர் அனில் பைஜாலை, சந்தித்து கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news





தோல்விக்கு பின் மாற்றம்


சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், டில்லியில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி மூன்றாம் இடத்தை தான் பிடித்தது. இதன் மூலம், மோடியை தொடர்ந்து எதிர்த்தால், மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை கெஜ்ரிவால் உணர்ந்து கொண்டார்.வரும் 2020ம் ஆண்டில் டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை ஆம் ஆத்மி எதிர்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில், மோடியையும், மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சிப்பதும், டில்லி அரசை செயல்பட விட பா.ஜ., அனுமதி மறுக்கிறது என விமர்சிப்பதும் மற்றவர்கள் தனது அரசின் செயல்பாட்டை விமர்சிப்பது போன்றது தான் என கெஜ்ரிவால் நினைக்கிறார்.


latest tamil news




சமீபத்தில், மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் மென்மை போக்கை கடைப்பிடிக்கிறீர்களா என கெஜ்ரிவாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கெஜ்ரிவால், மென்மை போக்கு என எதை குறிப்பிடுகிறீர்கள்? மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் மென்மை போக்கை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன? டில்லியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க தயார் என பதிலளித்தார்.


மோடிக்கு எதிராக திரும்பியது ஏன்?


மோடியுடன் கெஜ்ரிவால் சிக்கல் நிறைந்த வகையிலேயே உறவை கடைப்பிடித்து வந்தார். தன் மீது மக்கள் நம்பிக்கை வைத்த நிலையில், கெஜ்ரிவால் அரசியல் ரீதியாக முதல் தவறை செய்தார். அவர், டில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இதற்கு அவரிடம் எந்த காரணமும் இல்லை.தொடர்ந்து அடுத்த தவறை செய்த கெஜ்ரிவால், 2014-ல் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டார். அப்போது, மோடிக்கு இணையாக கெஜ்ரிவால் அறியப்பட்டார். ஆனால், வாரணாசியில் கெஜ்ரிவால் படுதோல்வியை சந்தித்தார். மிகவும் கொள்கை பிடிப்புள்ளவராக அறியப்பட்ட கெஜ்ரிவால், பிரதமர் பதவி ஏற்க காத்திருக்கவில்லை. பொறுமையாகவும் இருக்கவில்லை. இது அவரது அரசியல் பெயரை பெரிதும் பாதித்தது.

டில்லி முதல்வர் பதவியில் இருந்து விலகியதற்காக மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து 2015 ல் டில்லி சட்டசபை தேர்தலில் 70 இடங்களில் 67 ல் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அசைக்க முடியாத நபராக மோடி இருந்த கட்டத்தில், கெஜ்ரிவாலின் வெற்றி ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.


latest tamil news




டில்லிக்குள் மட்டும் ஆம் ஆத்மி செயல்பட்டால், கெஜ்ரிவாலுக்கு பிரச்னை இல்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியதாக ஆம் ஆத்மியிலிருந்து விலகிய அசுதோஷ் சுக்லா கூறியுள்ளார்.


latest tamil news




அதற்கு மாறாக செயல்பட்ட கெஜ்ரிவால், அந்த அறிவுரையை கண்டுகொள்ளவில்லை. இப்போது, டில்லியில் தன்னை காத்து கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து விட்டார். அதனால் தான் மோடியிடம் அவர் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறார் என்கிறார்கள் டில்லி வட்டாரத்தில்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூலை-201909:27:04 IST Report Abuse
madhavan rajan தமிழ் நாட்டில் எதிராளியைப் பற்றி பொய்களைக் மீண்டும் மீண்டும் கூறினால் நம்பிவிடுவார்கள். வட இந்தியர்கள் நம்பவில்லை அதுதான் காரணம். தங்கள் பொய்கள் விலைபோகவில்லை என்பதை கெஜ்ரி அறிந்து கொண்டு விட்டார். ராகுலும் ஓரளவு உணர்ந்துள்ளார். ஆனால் மக்களை ஏமாற்ற வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆலோசிப்பார்கள். மூன்று முறை தேர்ந்து ஒருவர் மக்கள் ஆதரவு பெற்றிருக்கிறார் என்றால் அவர் எதோ நல்லது செய்திருக்கிறார், எதிர் அணியில் உள்ளவர்கள் ஆட்சியின் தீமை குறைந்திருக்கிறது என்று பொருள். அதை உணராமல் தான் ஆயிரம் கொள்ளைக்காரர்களை உடன் வைத்துக்கொண்டு எதிராளியை திருடன் என்று கூறினால் பல்பு வாங்காமல் வேறென்ன ஆகும்.
Rate this:
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
18-ஜூலை-201910:22:16 IST Report Abuse
 nicolethomson நல்லது நடந்தா சரி அதே போல நவீன் பட்நாயக்கை உதாரணம் கூறிய வாசகருக்கு உண்மையில் ஒரு நன்றி
Rate this:
Cancel
Babu Desikan - Bangalore,இந்தியா
17-ஜூலை-201911:32:19 IST Report Abuse
Babu Desikan இவர்கள் எல்லோரையும் விட அறிவாளியாக நடந்து கொள்வது நவீன் பட்நாயக் அவர்கள் தான். மத்திய அரசை பகைத்துக் கொள்வது இல்லை. தன்னுடைய மாநிலத்தை தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து ஆட்சி புரிந்து வருகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X