பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் தரிசனம்: மதுரை ரவுடிக்கு முதல் மரியாதை

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (56)
Advertisement
அத்திவரதர்,மதுரை  ரவுடி, வரிச்சியூர் செல்வம்,செல்வம்,

சென்னை: காஞ்சிபுரம், வரதராஜர் பெருமாள் கோவிலில், அத்திவரதர் காட்சி அளித்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு பின், இந்த வைபவம் நடைபெறுவதால், லட்சக்கணக்கானோர், பல மணி நேரம் காத்திருந்து, அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சேர்ந்த, பிரபல ரவுடி செல்வம், முக்கிய பிரமுகர்கள் வரிசையில், எந்த தாமதமும் இன்றி, குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளுடன் சென்று, அத்திவரதரை தரிசித்தார். முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும், முதல் மரியாதை, அவருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் அளிக்கப்பட்டது. அத்திவரதர் முன் அமர வைக்கப்பட்டு, பரிவட்டம் கட்டி, வரிச்சியூர் செல்வத்தை, அங்கிருந்த அர்ச்சகர்கள் கவுரவித்த காட்சி, சமூக வலைதளத்தில், வீடியோவாக வெளியாகி உள்ளது.

கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என, பல வழக்குகளில் சிக்கிய செல்வத்திற்கு, கோவில் நிர்வாகத்தார், மரியாதை அளித்து சிறப்பு செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது, போலீசாரின் பாதுகாப்பு குளறுபடியை அம்பலப்படுத்துவதாக, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ரவுடி செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு, வி.வி.ஐ.பி., நுழைவு சீட்டு கிடைக்க ஏற்பாடு செய்தது யார்; அனுமதி அளித்த போலீசார் யார் என்பது குறித்து, டி.ஜி.பி., அலுவலக உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Valliappan - Chennai,இந்தியா
24-ஜூலை-201907:32:36 IST Report Abuse
Valliappan அய்யர் முகத்தில் பயம் தெரியுது.. ரவுடி முகத்தில் புன்னகை தவழுது.. எப்பிடி என்பது போல.. அடக்கடவுளே.. ராவணன் காலத்தில் இருந்து யார் கடைசியில் ஜெயிப்பார்கள்.. தர்மம் தானே..
Rate this:
Share this comment
Cancel
P. SRINIVASALU - chennai,இந்தியா
23-ஜூலை-201914:32:16 IST Report Abuse
P. SRINIVASALU அப்போ ADMK எல்லோரும் யோக்கியர்களா.
Rate this:
Share this comment
Cancel
P. SRINIVASALU - chennai,இந்தியா
23-ஜூலை-201914:28:23 IST Report Abuse
P. SRINIVASALU அப்போ ADMK அயோகியன் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X