பதிவு செய்த நாள் :
'தரமான சாலை வேண்டுமானால்
கட்டணம் செலுத்தத் தான் வேண்டும்'

புதுடில்லி: ''தரமான சாலை வசதி வேண்டுமானால், அதற்கான சுங்க கட்டணத்தை செலுத்தித் தான் ஆக வேண்டும்,'' என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர், நிதின் கட்கரி கூறினார்.

 தரமான சாலை,கட்டணம்,அமைச்சர், நிதின் கட்கரி


பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான, நிதின் கட்கரி, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:கடந்த, ஐந்து ஆண்டுகளில் மட்டும், 40 ஆயிரம், கி.மீ.,க்கு நெடுஞ்சாலை அமைத்துள்ளோம். சுங்க கட்டணம் வசூல் தொடர்பாக, சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்தில் வித்தியாசம் இருப்பதாகவும், சிலர் தெரிவித்துள்ளனர்.

நிதி இல்லை


மலைப்பாங்கான பிரதேசங்களில் சாலை அமைக்கும் போது, அதற்கு அதிக

நிதி தேவைப்படும்; அதற்கேற்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தரமான சாலை வசதி வேண்டுமானால், அதற்கு, சுங்க கட்டணம் செலுத்தித் தான் ஆக வேண்டும்.சாலை திட்டங்களைநிறைவேற்ற, அரசிடம் போதிய நிதி இல்லை. எனவே, சுங்க கட்டணம் வசூலிப்பது தொடரும். அதை, ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை.

பல மாநிலங்களில், சாலை திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக, சிலர் கூறுகின்றனர். சாலை அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி, பெரும் சவாலாக உள்ளது.மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே, சாலை திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். எந்த ஒரு சாலை திட்டத்தையுமே, குறைந்தது, 80 சதவீத நிலங்களையாவது கையகப்படுத்தினால் தான், பணிகளை துவங்க முடியும்.

நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில், மேற்கு வங்கம், பீஹார் போன்ற மாநிலங்கள், மிகவும் மெதுவாகச் செயல்படுகின்றன.பா.ஜ., அரசு,2014ல் பொறுப்பேற்றபோது, 403 திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருந்தன. தற்போது, பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.டில்லி - மும்பை இடையே, அதிவிரைவு பசுமை நெடுஞ்சாலை

Advertisement

விரைவில் அமைக்கப்படும். ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில், வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய பகுதிகள் வழியாக இந்த சாலை அமைக்கப்படும். இங்கு, நிலம் கையகப்படுத்துவது, பெரும் பிரச்னையாக இருக்காது.

ஏற்க முடியாது


சாலை திட்டங்களை நிறைவேற்றுவதில், தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படும் புகார்களை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில், மாநிலங்களுக்கு இடையே, எந்த வேறுபாடும் காட்டப்படுவது இல்லை. அமெரிக்காவில் தரமான சாலை வசதிகள் இருந்தும், அதையே சிலர் குறை கூறியதாக, முன்னாள் ஜனாதிபதி, கென்னடி கூறியிருந்தார். அதை, நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-ஜூலை-201921:13:36 IST Report Abuse

Krishnamurthy Venkatesanதனியார்தான் தரமான சாலைகளை போடவும் பராமரிப்பு செய்யவும் முடியுமென்றால் அரசாங்கம் எதற்கு? RTO ஆபீஸில் ரோடு tax ஏன் வசூலிக்கிறார்கள்? அப்படியென்றால் நமது வரி பணத்தில் ரோடு பராமரிப்பு செய்ய முடியாதா?

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
19-ஜூலை-201920:58:25 IST Report Abuse

Jaya Ramஅப்புறம் எப்படி கார்பொரேட் கம்பெனிகள் சம்பாரிப்பது ...

Rate this:
Rajas - chennai,இந்தியா
17-ஜூலை-201918:45:19 IST Report Abuse

Rajasடோல் கம்பனிகள் அகில இந்திய கட்சிகளுக்கு Donation தருகிறார்கள். மாநில கட்சிகளின் கொடி போட்ட வண்டிகளுக்கு டோல் கேட்பதில்லை. 60 கிலோ மீட்டர்களுக்கு மேல் தான் இன்னொரு டோல் பிளாசா இருக்க வேண்டும். Corporation லிமிட்டில் இருக்க கூடாது. டோல் வேண்டாம் என்றால் உள்வழியை use செய்யலாம். ஆனால் அதில் சென்றால் வண்டியே உடைந்து விடும். டோல் பிளாசாவில் காத்திருப்பதால் வருடத்திற்கு 87000 (in 2012 ) கோடி ரூபாய்க்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. கட்சிகளுக்கு நல்ல வருமானம்.

Rate this:
Gopi - Chennai,இந்தியா
17-ஜூலை-201918:07:04 IST Report Abuse

GopiLife time tax வசூல் செய்வது போல சுங்கச்சாவடி நுழைவு கட்டணத்தை ஆயுட்கால சந்தாவை போல வாங்கலாம். அதற்க்கு EMI வசதி கூட ஏற்படுத்தலாம். குறைந்தது 6 லட்சம் ருபாய் இல்லாமல் நான்கு சக்கரவாகனங்கள் வாங்கப்படுவதில்லை. இந்த ஆயுட்கால சந்தா தொகையை ஓராண்டுக்குள் செலுத்தும் வழியை செய்யவேண்டும். அதுபோல EV (மின் வாகனங்களுக்கு ) 50 % விலக்கு அளித்தால் அதை வான்குவூரை ஊக்குவிப்பதற்கு அமையும். இவ்வாறு பெறப்பட்டு ஆயுட்கால சந்தாவை பென்ஷன் போன்ற நடைமுறையில் வைத்து அதில் வரும் வட்டியை கொண்டு சாலைமேம்பாடு பாதுகாப்பு முறைகளில் கவனம்செலுத்தலாம். உதாரணத்திற்கு ஒவ்வொரு அரைகிலோமீட்டருக்கும் தொலைத்தொடர்பு வசதி , அவசர உதவி , குற்ற தடுப்பு அலாரங்கள் . ஒவ்வொரு 10 கிலோமீட்டருக்கு அதன் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் விதமாக அவர்களை அரசு நிர்வகிக்கும் பயணம் செய்வோருக்கு ஏற்ற தங்கும் விடுதியில் பணியமர்த்தவேண்டும் (Travellers ' INN அல்லது வாகன ஓட்டிகள் இளைப்பாறும் பாந்துகள் - Truck Bays ) . டிரோன்கள் அமைத்து அந்தந்த பகுதி பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கலாம்.

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X