சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 16, 2019
Advertisement

'டவுட்' தனபாலு

இ.பி.எஸ்., முதல்வர்: குடிமராமத்து திட்டத்தில், யார் குறுக்கீடும் இருக்கக் கூடாது என்பதற்காகவே, விவசாயிகளின் பாசன சங்கத்தின் வழியே, திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

டவுட் தனபாலு: நல்ல நோக்கம் தான்... ஆனா, 'ஆளும்கட்சியினரைத் தாண்டி, இதுல யாருடைய குறுக்கீட்டுக்கு வாய்ப்பு இருக்கு... இதுபோல், பல நுாறு கோடி ரூபாய் செலவில், மாநிலம் முழுக்க, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருதே... அவற்றுக்கும் ஏன் கடிவாளம் போடலை'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிட மாட்டாங்களா...! மேலும், காலம் காலமா இப்படி நீங்க, 'சங்கம்' அமைக்கிறதும், எந்த வேலையும் சரியா நடக்காம இருக்கறதையும் பார்த்து தானே, மக்கள் தாங்களாவே களத்துல இறங்குறாங்க... 'இதை விட வேற அவமானம் நமக்கில்லே'ன்னு, உங்களுக்கு தோணலியாங்கிற, 'டவுட்'டும் எழுதே!


பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை கொண்டு வரப்பட்டு, ஒருவர் கட்சி தாவினாலோ அல்லது உயிரிழந்து விட்டாலோ, அவருக்கு பதிலாக, பட்டியலில், அடுத்த வரிசையில் உள்ளவர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக நியமிக்கப்படுவர் என்பதால், கட்சித் தாவலுக்கோ, இடைத்தேர்தலுக்கோ வாய்ப்பு இருக்காது.

டவுட் தனபாலு: ரொம்ப அடுக்கிட்டே போகாதீங்க... பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் தற்போது என்ன நடக்குது... ஆளும்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா, யாருடைய ஆசைக்கு ஏற்ப நடக்குது... விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வந்தால், அரசியல் ஆட்டம் இன்னும் அதிகரிச்சிடுமே... அதைவிட முக்கியமாய், பதவிக்காக எதையும் செய்யும் அரசியல்வாதிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் உயிரோடு விளையாடினால், நிலைமை என்னவாகும்கற, 'டவுட்' எதுவும் வரலையா...!

-தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு: தேர்வு அறிவித்த பின், விதிகளை மாற்றக் கூடாது என்ற, நீதிமன்ற உத்தரவை மீறி, தபால்துறை தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. எனவே, தமிழில் தேர்வு நடத்த, மத்திய அரசை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றுவோம்; சிறப்பு விவாதம் நடத்துவோம்.

டவுட் தனபாலு: நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தபால் துறை தேர்வு நடத்தப்பட்டிருந்தால், அதை, சட்டரீதியாக எதிர்கொண்டு, ஒரு தீர்வை எட்டலாமே... சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதால், என்னவாகிடப் போகுது... பல்வேறு விஷயங்களில், இதுவரை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், எந்த நிலையில் இருக்கு என்ற, 'டவுட்' வரலையா...!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X