சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூலை 16, 2019
Advertisement
  பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை அறிக்கை:ஹிந்தி மொழி எதிர்ப்பு பாசாங்கு காட்டும், தமிழக, காங்., தலைவர், கே.எஸ்.அழகிரிக்கு, ஹிந்தி எதிர்ப்பு வரலாறு, மறந்து விட்டது. ஹிந்தி திணிப்பின் பிதாமகனே, காங்கிரஸ் தான். அன்றைய காங்கிரசின், ஹிந்தி திணிப்பை எதிர்த்து தான், தி.மு.க., மொழிப் போராட்டம் நடத்தியது. அதனால் தான், காங்., ஆட்சி, முடிவுக்கு வந்தது. அன்றைய, காங்., ஆட்சிக்கு, இறுதி யாத்திரை நடத்திய, தி.மு.க.,விற்கு, இன்றைக்கு, கூட்டணி பல்லக்கு துாக்குகின்றனர் காங்கிரஸ்காரர்கள்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன், எம்.பி., பேச்சு: ஜாதிய மதவாத சக்திகள், அரசியல் தளத்தில் வலிமை பெற்று வருவதால், ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள், கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்.


பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேட்டி: தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு, வெளிநாட்டில் உள்ள சிலைகளை, மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி செய்யும் அதிகாரி, பொன் மாணிக்கவேலுக்கு, தமிழக அரசு உதவ வேண்டும். 'வெளிநாட்டில் உள்ள சிலைகள், எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை' என, அமைச்சர் பாண்டியராஜன் கூறுகிறார். ஹிந்து அறநிலையத்துறை சட்டப்படி, கோவில் சொத்துக்கள் அடங்கிய பதிவேடுகள், முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது, இதன்மூலம் தெரிகிறது


இந்து மக்கள் கட்சி தலைவர், அர்ஜுன் சம்பத் பேட்டி: நடிகர் கமலுக்கு, அவர் படம் ஓடக் கூடிய ஒரு சில இடங்கள் மற்றும் மாற்றத்தை விரும்பக் கூடிய சிலர், தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். கமல் ஒரு கம்யூனிஸ்ட். அவரின் ஓட்டு வங்கி, நிலையானது அல்ல. அது, தேய்ந்து, ஓய்ந்து போகும். தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் ரஜினி போட்டியிடுவார். அதில், ரஜினியா, ஸ்டாலினா என, போட்டி இருக்கும். இதில், ரஜினி முதல்வர் ஆவார்.


இவ்ளோ துாரம், நீங்க, அலசி ஆராயிறீங்களா... அல்லது வேறு யாராவது சொல்லிக் கொடுத்து, அதைப் பேட்டியாக்கிட்டீங்களா... எதுவா இருந்தாலும், பேஷ்... பேஷ்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், இ.கம்யூ., தேசிய குழு உறுப்பினர், தா.பாண்டியன் பேட்டி: தொழில் துறைக்கு ஊக்கம் தருவதாக, மத்திய பட்ஜெட் இருந்திருந்தால், பங்குச் சந்தை, ஏற்றம் கண்டிருக்கும். ஆனால், கடும் சரிவை சந்தித்துள்ளது. ஒரே நாளில், 2.30 லட்சம் கோடி மியூச்சுவல் பண்ட், வெளிநாட்டுக்கு சென்று விட்டது. இதனால், தொழில் துறையினர் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X