பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஜூலை 16, 2019
Advertisement
இதே நாளில் அன்று

ஜூலை, 17, 2012 மிருணாள் கோரே:

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 1928, ஜூன் 24ல் பிறந்தார். மருத்துவம் படித்த இவர், இளமை பருவத்தில், மகாத்மா காந்தியின், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தால் கவரப்பட்டு, மருத்துவப் பணியைத் துறந்தார். ஏழை மக்களின் நலனுக்காக போராடினார். பெண் உரிமைகள், குடி உரிமைகள், சமய நல்லிணக்கம், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக, பல போராட்டங்களில் பங்கெடுத்து உள்ளார்.ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். மஹாராஷ்டிரா சட்டசபையின், எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர். 1977ல், மும்பை வடக்கு லோக்சபா தொகுதி, எம்.பி.,யானார். மும்பையின் வடக்கு சுற்றுப்புற பகுதியான, கோரேகானுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ததற்காக இவரை, 'பானிவாலி பாய்' என, மக்கள் அழைத்தனர். 1977ல், மத்தியில் அமைந்த, ஜனதா தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சர் பதவிக்கான வாய்ப்பை ஏற்க மறுத்தார். 2012 ஜூலை, 17ல் காலமானார்.அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X