பதிவு செய்த நாள் :
கண்டிப்பு!
பார்லி.,க்கு, 'மட்டம்' போடும் அமைச்சர்களுக்கு மோடி...
சபைக்கு வராத மந்திரிகளை கணக்கெடுக்கவும் உத்தரவு

புதுடில்லி: பார்லிமென்ட் கூட்டத் தொடருக்கு வராத அமைச்சர்களை, பிரதமர் மோடி, கண்டித்துள்ளார். 'எந்தெந்த அமைச்சர்கள், சபைக்கு வரவில்லை என்பதை கணக்கெடுத்து, எனக்கு, ஒவ்வொரு நாள் மாலையிலும், பட்டியல் தர வேண்டும்' என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சருக்கு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

Modi,PM,பிரதமர்,,மோடி,அமைச்சர்,கண்டிப்பு


-பிரதமராக, மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்தே, ஆளும் கட்சி, எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு, கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.'அமைச்சர்கள் தினமும் சபைக்கு வர வேண்டும். அவர்கள் துறை சார்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கும் வகையில், சபையில் இருந்தாக வேண்டும். 'எம்.பி.,க்கள், அவர்களது தொகுதிகளுக்கு சென்று, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி, அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும்' என, சமீபத்தில் கூறியிருந்தார்.

நடவடிக்கை


மேலும், பா.ஜ., பொதுச் செயலர் கைலாஷ் விஜய் வர்கியா மகனும், மத்திய பிரதேச மாநில, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுமான, ஆகாஷ் விஜய் வர்கியா, பொது இடத்தில், அதிகாரி ஒருவரை தாக்கிய, 'வீடியோ' வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது.'பா.ஜ.,வுக்கு, மக்களிடையே கெட்ட பெயரை ஏற்படுத்தும் கட்சியினர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும், பிரதமர் கூறியிருந்தார்.

கடந்த சில வாரங்களாக நடந்து வரும், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், 'எதிர்க்கட்சியினர் கேள்விகள் எழுப்பும்போது, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள்,

சபையில் இருப்பது இல்லை' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக,எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பார்லிமென்டிலேயே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, 'கேபினட்' அமைச்சர்களே, சபைக்கு வருவதை தவிர்ப்பதாக, புகார் எழுந்தது.

பட்டியல்


இந்நிலையில், பா.ஜ., - எம்.பி.,க்களின் கூட்டம், நேற்றுடில்லியில் நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர், சபைக்கு வராத அமைச்சர்களை கடுமையாக கண்டித்தார்.

இது குறித்து, அவர் பேசியதாக, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்கும்போதும், மற்ற நேரங்களிலும், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், கட்டாயம் சபையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு அமைச்சருக்கும், என்னென்ன பொறுப்பு, கடமைகள் உள்ளதோ, அவற்றை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். எனவே, அமைச்சர்கள், தினமும் சபைக்கு வர வேண்டும். சபைக்கு வராத அமைச்சர்கள் யார் என்பது குறித்து, பட்டியல் தயாரித்து, அதை, பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் நாட்களில், தினமும் எனக்கு பட்டியலாக அளிக்க வேண்டும். பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், பிரகலாத் மோடி, இந்த பட்டியலை தயார் செய்து, என்னிடம் அளிக்க வேண்டும்.

முன்னுரிமை


ஆளும் கட்சி, எம்.பி.,க்கள், அனைவரும், தங்கள் தொகுதிகளுக்கு சென்று, மக்கள் பிரச்னைகளை தீர்க்க, முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்போது, பல மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், அதை தீர்ப்பதற்கு, அதிகாரிகளுடன் பேசி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.காசநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்க, சுகாதாரத்துறையினருடன் சேர்ந்து, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித நேய பிரச்னைகள், கால்நடைகள் நலன் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அமைச்சர்களும், பா.ஜ., - எம்.பி.,க்களும், மக்கள் நலன் சார்ந்த

Advertisement

விஷயங்களில், கட்சி வேறுபாடுகளை கடந்து சேவையாற்ற வேண்டும். இவ்வாறு, பிரதமர் பேசியதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமரின் இந்த அதிரடி உத்தரவால், சபைக்கு, 'மட்டம்' போடும் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கூட்டத் தொடர் நீட்டிக்கப்படுமா?


பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம் முடிந்ததும், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், பிரகலாத் ஜோஷி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:அமைச்சர்கள், தவறாமல் சபைக்கு வர வேண்டியதன் அவசியத்தை, பிரதமர் வலியுறுத்தினார். மேலும், இந்த கூட்டத் தொடர், வரும், 26ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏராளமான மசோதாக்கள் நிலுவையில் உள்ளதால், தேவைப்பட்டால், கூட்டத் தொடரை, மேலும் நீட்டிக்க பரிந்துரைக்கலாம் என்றும், பிரதமர் கூறினார்.

நடப்பு லோக்சபாவில், பெரும்பாலான, எம்.பி.,க்கள் புதியவர்கள் என்பதால், அவர்கள், தங்கள் தொகுதிகளில், சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றும், பிரதமர் வலியுறுத்தினார். எப்போதும், முதலில் செய்யும் பணி தான், மக்களின் மனதில் கடைசி வரை இடம்பிடித்திருக்கும் என்பதால், முதல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றும், பிரதமர் கூறினார். காசநோயை, 2030க்குள் ஒழிக்க வேண்டும் என, சர்வதேச அளவில் இலக்கு நிர்ணக்கப்பட்டுள்ளது; ஆனால், நாம், நம் நாட்டிலிருந்து, 2025க்குள்ளேயே, அந்த நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என்றும், பிதரமர் தெரிவித்தார். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (6+ 35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-ஜூலை-201920:26:20 IST Report Abuse

SIVA. THIYAGARAJANநல்ல நிர்வாகம் கண்டிப்பு பலே பாராட்டலாம்.

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-ஜூலை-201920:24:50 IST Report Abuse

SIVA. THIYAGARAJANபிரதமர் ஏன்றால் இப்படித்தான் . மக்கள் வரிபணத்தை இப்படி கூட்டத்திற்கு வராமல் மக்கள் பணி ஆற்றாமல் தமிழ்நாட்டில் ஓருவர் சாகும்வரை சம்பளம் பெற்று சென்றுள்ளார் . சரிதானா?

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-ஜூலை-201919:57:41 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஊழலற்ற ஆட்சி வேணும்னா இப்படித்தான் செயல்படனும். மக்கள் சேவைக்கு வந்தவர்கள் தன் சுய லாபத்திற்காக வெளி நடப்பு செய்பவர்களையும் கணக்கெடுத்து மட்டம் தட்டனும்.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X