பொது செய்தி

தமிழ்நாடு

எலக்ட்ரீசியன் கொலை வழக்கு: குற்றவாளியை பிடிக்க தனி படை

Added : ஜூலை 16, 2019
Advertisement

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே எலக்ட்ரீசியனை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க, தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் புதிதாக ஓட்டல் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.
இதில் கரூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கரூர் தாந்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சுந்தரேசன், 26, இவரது நண்பர் பழனியாண்டி ஆகியோர் இக்கட்டடத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்தனர்.மொபைல் போன் எடுத்தது குறித்து சுந்தரேசனுக்கும், கட்டடத் தொழிலாளர்கள் சிதம்பரம், குமாரவேல், பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கட்டடத் தொழிலாளர்கள் மூவரும் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் சுந்தரேசன் இறந்தார். இக்கொலை வழக்கு குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் கொலை குற்றவாளிகளை பிடிக்க (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் திலக் ஆகியோர் தலைமையில், தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கரூர், தாந்தோன்றிமலை உள்பட பல்வேறு இடங்களில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X