ரயில்வே ஸ்டேஷனில் தாழ்வான நடைமேடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஸ்டேஷனில் தாழ்வான நடைமேடை

Added : ஜூலை 16, 2019
 ரயில்வே ஸ்டேஷனில் தாழ்வான நடைமேடை

காரமடை:காரமடை ரயில்வே ஸ்டேஷனில், தாழ்வாக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ஏறி இறங்குவதற்கு கடும் சிரமப்படுகின்றனர்.கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு நான்கு முறையும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு நான்கு முறையும், பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது.
காரமடை சுற்றுவட்டார கிராமப்பகுதிகள் தோலம்பாளையம், வெள்ளியங்காடு, மருதுார், தாயனுார் உள்ளடங்கிய, நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இங்கிருந்து கோவைக்கு பள்ளி, கல்லுாரி மாணவ. மாணவியர்கள் ,அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களுக்கு அன்றாடம் சுமார் 4,000 பயணிகள் பாசஞ்சர் ரயிலை பயன்படுத்துகின்றனர். சேலம் ரயில்வே கோட்டத்தில் அதிக சீசன் டிக்கட் விற்பனையாவதில் காரமடையே முதலிடத்திலுள்ளது.பயணிகளுக்கான அத்யாவசிய வசதிகள் குறித்து, ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. பாசஞ்சர் ரயில் 11 பெட்டிகள் கொண்டு மின்சார இன்ஜி னுடன், இயங்குகிறது. காரமடை ரயில் நிலையம் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்துவிட்டதால், பயணிகள் நடைமேடை மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. தற்போது ரயில் படிக்கட்டின் உயரமும், நடைமேடையின் உயரத்திலும் அதிக இடை வெளியுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
மேட்டுப்பாளையம் - கோயமுத்துார் ரயில் பயணிகள் சங்க தலைவர் ராஜன் கூறுகையில், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் நடைமேடைகளில் பிரச்னை இல்லை. காரமடை ரயில் நிலையத்தில் மட்டும், ஒன்னறை அடி உயரம் வித்தியாசம் உள்ளதால் வயதான பயணிகள் ஏறி, இறங்கும்போது கீழே விழுகின்றனர்.
மேலும் ரயில் புறப்படும் சமயத்தில் ஓடி வரும் பயணிகள் ஏறும் போது, கால் இடறி விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து சேலம் கோட்ட மேலாளரிடம் கடந்த மூன்றாண்டாக மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.காரமடை ரயில்வே ஸ்டேஷனில், பாசஞ்சர் ரயிலில் பயணிகள் பெட்டிகளில் ஏற சிரமப்படுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X