பொது செய்தி

தமிழ்நாடு

அரசுப்பணிக்கு இலவச பயிற்சி: வேலை வாய்ப்பு துறை ஏற்பாடு

Added : ஜூலை 16, 2019
Advertisement
 அரசுப்பணிக்கு இலவச பயிற்சி: வேலை வாய்ப்பு துறை ஏற்பாடு

பெ.நா.பாளையம்:தமிழ்நாடு அரசுப்பணி தேர்வுக்கு கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் நான்கில், 6 ஆயிரத்து, 400 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள், தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற, ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.அன்றாடம் காலை, 10.00 மணி முதல் மாலை, 5.00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வில் தேர்ச்சி பெற ஆலோசனை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள், அதற்கான ஆதாரம் மற்றும் போட்டோவுடன் விபரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உடனே சமர்ப்பித்து, பயிற்சியில் சேரலாம்.
மேலும், விபரங்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் போன் ௦௪௨௨- 2642388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பொள்ளாச்சி வட்டார மனுதாரர்கள், பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தில் நடக்கும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். இத்தகவலை கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் ஜோதிமணி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X