பதிவு செய்த நாள் :
உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் நிதி , 'கட்'

'தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியை ரத்து செய்ய நேரிடும்' என, பார்லிமென்டில், மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம்,மத்திய அரசு,எச்சரிக்கை,உள்ளாட்சி தேர்தல், நிதி ,கட்


லோக்சபாவில், கேள்வி நேரத்தின்போது, 'பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் வெளிப்படைத் தன்மை' குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, தி.மு.க.,- எம்.பி., ராஜா பேசியதாவது: அரசியல் அமைப்பு சட்டத்தின், 73வது திருத்தம் பஞ்சாயத்துராஜ் சட்டம். இச்சட்டம் வந்த பிறகு, ஒவ்வொரு ஊராட்சியுமே சிறு குடியரசு தான்.

தவிர, உள்ளாட்சி அமைப்புகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுகளே என, அரசியல் சட்டம் அதிகாரம்வழங்கியுள்ளது.

அந்த அமைப்புகள், வெளிப்படையாக இருக்க வேண்டுமென கூறுகிறீர்கள். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தப்பட்டு, உறுப்பினர்கள், தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான், வெளிப்படைத்தன்மை என்பதற்கு அர்த்தம் இருக்கும்.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

இதனால், எங்கு பார்த்தாலும், 'கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன்' என்ற காட்சிகளையே காண நேரிடுகிறது. இந்த நிலைமையை மாற்றும் வகையில், கண்டிப்பாக தேர்தல் நடத்துவதற்கோ, தேர்தலை நடத்தாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கவோ, சட்டம் கொண்டு வரும் திட்டம், மத்திய அரசிடம் உள்ளதா? இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement

அதற்கு, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர், நரேந்தர் சிங் தோமர் அளித்த பதில்: உள்ளாட்சித் தேர்தல்கள், தமிழகத்தில் நடத்தப்படாமல் உள்ளதை அறிவோம். விரைவாக நடத்த வேண்டுமென்றே, மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், கோர்ட்டில் வழக்குகள் இருப்பதாக, மாநில அரசு காரணம் கூறுகிறது. உரிய காரணம் இல்லாமல், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்தால், மத்திய அரசு தன் நிதியை ரத்து செய்யும்.இவ்வாறு, அவர் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
17-ஜூலை-201912:53:59 IST Report Abuse

venkatanஎந்த அரசாக இருந்தாலும் கிராம ராஜ்ஜியத்தை வலுவுள்ளதாக மாற்றினால் மட்டுமே வளர்ச்சி.மேலும் அவர்களுக்கும் கல்லா கட்ட ஒரு சந்தர்ப்பம் வழங்கினால் என்ன?மைய மாநில உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அந்த உரிமையா?

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
17-ஜூலை-201911:32:55 IST Report Abuse

ganapati sbவேலூரில் அதிமுக வென்றுவிட்டால் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரும்

Rate this:
R. Vidya Sagar - Chennai,இந்தியா
17-ஜூலை-201910:39:46 IST Report Abuse

R. Vidya Sagarஇந்த MP யின் கூற்றுப்படி உள்ளாட்சி தேர்தல் நடந்து விட்டால் 'கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன்' எதுவுமே இருக்காது. ஆஹா.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X