அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வைகை அணை தூர்வாரும் அறிவிப்பு இல்லை
'தூங்கும்' திட்டத்துக்கு 'தாலாட்டு' பாடிய முதல்வர்

மதுரை: வைகை அணையை துார்வாருவது தொடர்பான அறிவிப்பை சட்டசபை மானிய கோரிக்கையில் முதல்வர் பழனிசாமி வெளியிடாதது மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.

வைகை அணை,அறிவிப்பு,இல்லை,EPS,முதல்வர்,பழனிசாமி


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மொத்த உயரம் 71 அடி. பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால் 20 முதல் 22 அடி வரை மண் மேவியுள்ளது. கொள்ளளவான 6,868 மில்லியன் கன அடியில், 800 முதல் 1200 மில்லியன் கனஅடி வரை அளவை அணை இழந்துள்ளது.அணையை துார்வார வசாயிகள் 20 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன் துார்வார திட்டம் தீட்டிய அரசு 189 கோடி ரூபாய் செலவிட முன்வந்தது. திட்டத்தை மாற்றுவதும், மாற்று திட்டம் தீட்டப்படுவதுமாய் காலம் சென்றது. அணையில்சிறு துரும்பு கூட அசையவில்லை. யார் கமிஷன் பார்ப்பது என்பதில் அரசியல்வாதிகளிடையே ஏற்பட்ட போட்டியால் துார்வாரும் திட்டம் துாங்குகிறது.

இதற்கிடையில் செலவின்றி வருமானத்துடன் அணையை துார்வாரும் புதிய திட்டத்தை பொதுப்பணித்துறை தயாரித்தது. அதன்படி துார்வாரும் நிறுவனம் மணல், வண்டல், செம்மண்ணை விற்றுக் கொள்ளலாம். 201 கோடி ரூபாய் வரை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த திட்டம். தற்போது வருவாய் தரும் இந்த திட்டமும்,189 கோடி ரூபாய் செலவு தரும்திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

முதல்வர் வசமுள்ள பொதுப்பணித்துறை மீதான மானிய கோரிக்கை சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்தது. 'வைகை

Advertisement

அணையை துார்வாரும் திட்டத்தை முதல்வர் அறிவிப்பார்' என எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். எந்த அறிவிப்பும் இல்லை. இது மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.

விவசாயிகள் கூறுகையில், 'அணையை துார்வார வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை உணராமல் அரசு கண்ணாமூச்சி காட்டுவது வேதனை அளிக்கிறது. தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முதல்வர் முன்வர வேண்டும்' என்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
17-ஜூலை-201909:57:19 IST Report Abuse

vbs manianவாருவது தூர் இல்லை. கமிஷன்.

Rate this:
RajanRajan - kerala,இந்தியா
17-ஜூலை-201907:23:37 IST Report Abuse

RajanRajanஇவனுங்க கட்டிங் கமிஷன் விவகாரம் ஒரு பெரிய அக்கப்போர் தான். இதுக்கு தான் இவனுங்க மாநில ஆட்சியே வேண்டாம் எனும் எண்ணம் மக்களிடையே ஓங்கி வருகிறது. எந்த ஒரு அரசு திட்டத்தையாச்சும் லஞ்சம் ஊழல் இல்லாமல் நுகர்வோருக்கு கிடைக்காது என்பது ஒரு அப்பட்டமான உண்மை. அப்புறம் எதற்கு இந்த மாநில அரசு ஆட்சி என கூத்தாடிகள் தேவை என்பது மக்களால் சிந்திக்க படவேண்டிய விஷயம். தேவை இல்லை மாநில ஆட்சி மத்திய அரசு ஆட்சி ஒன்றே போதும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்த மக்கள் வரி பணம் வீணடிடிப்பதை தடுக்கவும்.

Rate this:
Krish - Chennai ,இந்தியா
17-ஜூலை-201906:16:40 IST Report Abuse

Krish கார்பொரேஷன் குப்பைகளை கொட்ட இடம் கிடைக்கும்போது, தூர் வாரிய மண்ணை கொட்ட இடம் இல்லை என்பது அதிகாரிகளின் திறமையை kattukirathu. செயற்கை மலை உண்டாக்கலாம், இது OPS எடுக்க வேண்டிய முயற்சி.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X