ராகுல் ஆஜராக விலக்கு: சூரத் கோர்ட் உத்தரவு

Updated : ஜூலை 16, 2019 | Added : ஜூலை 16, 2019
Advertisement
ராகுல், ஆஜராக, விலக்கு, சூரத், கோர்ட், உத்தரவு

புதுடில்லி: குஜராத்தில் வசிக்கும் மோடி சமூகத்தினரை தரக்குறைவாக பேசியதாக, காங்கிரசின்ராகுலுக்கு எதிராக தொடரப்பட்ட அவதுாறு வழக்கில், அவர், நேரில் ஆஜராவதிலிருந்து, குஜராத் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்த ராகுல், 'திருடர்கள் எல்லாமே, மோடி என்ற பட்டப் பெயர் உடையவர்களாக உள்ளனர்' என்றார்.இதை எதிர்த்து, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர், சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.





'ராகுலின் பேச்சு, மோடி என்ற, ஒட்டு மொத்த சமூகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது' என, தன் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, 'ராகுல், ஜூலை, 16ல், ஆஜராக வேண்டும்' என, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, ராகுலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நீதிமன்றம் அனுப்பிய, 'சம்மன்' சமீபத்தில் தான், ராகுலுக்கு கிடைத்தது. இதனால், அவர், குஜராத் வருவதில் சிரமம் ஏற்பட்டது' என்றார்.
இதையடுத்து, ராகுல், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்த மாஜிஸ்திரேட், விசாரணையை அக்டோபர், 10க்கு ஒத்தி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X