அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இந்த வாட்டியாவது ஒழுங்கா ஆடுங்கப்பா!
தி.மு.க., வினரிடம் ஏ.சி.சண்முகம் கெஞ்சல்

வேலுார்:''இந்த தேர்தலையாவது ஒழுங்காக நடத்த விடுங்கள்,'' என, தி.மு.க., வினருக்கு, வேலுார் தொகுதி, அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர், ஏ.சி. சண்முகம் வேண்டுகோள் விடுத்தார்.

 ஒழுங்கா,ஆடுங்கப்பா,ஏ.சி.எஸ்.,கெஞ்சல்


வேலுார் லோக்சபா தொகுதியில், ஆக., 5ல் தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., கூட்டணி சார்பில், புதிய நீதிக் கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம், தி.மு.க., சார்பில், கதிர்ஆனந்த் போட்டியிடுகின்றனர்.அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர், ஏ.சி. சண்முகம், கே.வி. குப்பம் அடுத்த பழைய தொண்டான் துளசி கிராமத்தில், நேற்று பிரசாரம் துவங்கினார்.

அப்போது, அவர் அளித்த பேட்டி:


சென்ற தேர்தலின் போது, நேரமில்லாததால், சில இடங்களில் பிரசாரம் செய்ய முடியாமல் போனது. இப்போது, அந்த இடங்களில்,

பிரசாரம் செய்து வருகிறோம். தற்போதும், தி.மு.க., பிரமுகர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான், இந்த தருணத்தில், தி.மு.க., வினருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த தேர்தலையாவது, ஒழுங்காக நடத்த விடுங்கள். சென்ற முறை நீங்கள் செய்த தவறால், பிரதமரை தேர்ந்து எடுக்கும் உரிமையை,வேலுார் மக்கள் இழந்து விட்டனர். தேர்தலை, ஜனநாயக முறையில், அண்ணாதுரை வழியில் சந்தியுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினி ரசிகர்கள் ஓட்டு யாருக்கு?


ஏ.சி.சண்முகத்தின், 30 ஆண்டு கால நண்பர், நடிகர் ரஜினிகாந்த். இதனால், வேலுார் தேர்தலில் அவரது ஆசி, சண்முகத்துக்கு உள்ளதாக, அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் கூறினர். இந்நிலையில், வாலாஜாபேட்டை அடுத்த வாணியன்சத்திரத்தில் உள்ள, பழமையான குளத்தை துார்வார, ரஜினி ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்தனர். இதையொட்டி, நேற்று முன்தினம் நடந்த பூமி பூஜையில் கலந்து கொண்ட, ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா, நிருபர்களிடம் கூறியதாவது:

வேலுார் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் யாருக்கும், ரஜினியின் ஆதரவு இல்லை. கடவுள் அருளால், விரைவில், ரஜினி அரசியல் பிரவேசம் செய்வார். ரஜினி கட்சி ஆரம்பித்து,

Advertisement

பா.ஜ., வுடன் கூட்டணி சேர்வது குறித்து, அவர் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.3.22 லட்சம் பறிமுதல்


பறக்கும் படை அலுவலர் நடராஜன் தலைமையில், பள்ளிகொண்டா டோல்கேட்டில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த லாரியில் இருந்த மூவர், ஆவணமின்றி எடுத்து வந்த, 2.43 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், ஆந்திரா மாநிலம், பலமனேரைச் சேர்ந்த அவர்கள், பொய்கை மாட்டுச் சந்தையில், மாடு வாங்க வந்தது தெரிந்தது. இதேபோல, மற்றொரு லாரியில் வந்த இருவரிடம், 79 ஆயிரத்து, 300 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்கள், பலமனேரில் இருந்து, வேலுார் மார்க்கெட்டில், தக்காளி வாங்க வந்தது தெரிந்தது.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
19-ஜூலை-201914:32:58 IST Report Abuse

Jayveeivanunga kitta சொல்லறதைவிட உங்கள் காலேஜ் ஓனர் குரூப்ல இருக்குற ஜகத்து மற்றும் பார்வேந்தர்ஸ்கிட்ட சொல்லுங்க.. அவங்கதான் இவங்களுக்கு பைனான்ஸ்

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
17-ஜூலை-201920:48:04 IST Report Abuse

பாமரன்வேலூர் மக்களே... ஒரு மாசத்துக்கு கட்டிங் ஷேவிங் தள்ளி போடுங்க.... நீங்க பாட்டுக்கு இருநூறு ரூபாய் பாக்கெட்டில் எடுத்துக்கிட்டு போனால் தேர்தல் பறக்கும் படை புடிச்சிடுவாங்க சொல்லிட்டேன்.... வேணும்னா என்டே அம்மே அல்லது தல போட்டோவை பாக்கெட்டில் வச்சிக்கோங்க.... என்ன அமவுன்ட் வேணும்னாலும் நவுத்திப்புடலாம்... ஆமாம்...

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-ஜூலை-201911:52:48 IST Report Abuse

Cheran Perumalஇந்த முறை துரைமுருகன் சுதாரித்துக்கொண்டு விட்டார். தினகரன் பாணியில் டோக்கன் தருகிறார்களாம், வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வெளியே உள்ள ஊர்களில் வைத்து டோக்கனுக்கு ரூபாய் ஐனூறும் போக்குவரத்து செலவும் தருகிறார்களாம். நாங்க எதையுமே விஞ்ஞான முறைப்படி செய்வோமில்ல. ...

Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
17-ஜூலை-201914:06:12 IST Report Abuse

PANDA PANDI1991 2001 2011 அதே மக்கள் தான் 1996 2006 போட்டார்கள். நீங்க 10 FAIL அண்ணே நாங்க 8 PASSU அண்ணே. சலூன் ஷாப்க்கு போற அவரு சொன்னாராம். எள்ளு எண்ணெய்க்கு காயுது எலிபுலுக்ஸ் எதுக்கு ஷாப்புக்கு போய் காயணும். வேலூர் அவங்க ஜெயிச்ச மக்கள் ரொம்ப புத்திசாலினும் இவங்க ஜெயித்தால் திருந்தவே மாட்டாங்கன்னு சாபம் போடறது உங்க வாடிக்கை. RESULT வந்தாலும் இப்போ சொல்லற SHAME டயலாக் தான் சொல்லுவீர்கள்.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X