சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் சிக்கி இரு இளம்பெண்கள் பலி: ஒரே பைக்கில் மூவர் சென்றதால் நந்தனத்தில் பரிதாபம்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (9)
Advertisement
 பஸ்சில் சிக்கி இரு இளம்பெண்கள் பலி: ஒரே பைக்கில் மூவர் சென்றதால் நந்தனத்தில் பரிதாபம்

சென்னை, நந்தனத்தில், விதியை மீறி, மூவர் பயணித்த ஒரு இருசக்கர வாகனம், மாநகர பஸ் உரசிய விபத்தில், பஸ் சக்கரத்தில் சிக்கி, இரண்டு இளம்பெண் பொறியாளர்கள், சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம், சீதா நகரைச் சேர்ந்தவர் சிவா, 23. அதே மாவட்டத்தைச் சேர்ந்தோர், நாகலட்சுமி, 23, பவானி, 23. மூவரும், ஆந்திராவில் உள்ள ஒரு பொறியியல் கல்லுாரியில், ஒன்றாக படித்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன், 'கேம்பஸ் இன்டர்வியூ' வாயிலாக, எழும்பூரில் உள்ள, 'பெர்பெக்ட் கேல்பிரியேஷன் சென்டர்' என்ற நிறுவனத்தில், பயிற்சியுடன் கூடிய பணிக்கு, தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுடன் படித்த, மேலும் மூன்று பேரும், அந்நிறுவனத்தில், பணிக்கு தேர்வாகினர்.

சிவா உள்ளிட்ட மூன்று ஆண்கள் தனியாகவும், மூன்று பெண்கள் தனியாகவும், வேளச்சேரியில் அறை எடுத்து தங்கி, பணிக்கு சென்று வந்தனர். பவானி, நாகலட்சுமி இருவரும், ஒரே இருசக்கர வாகனத்தில், பணிக்கு செல்வது வழக்கம். நேற்று, அவர்களது வாகனம் பழுதானதால், இருவரும், சிவாவுடன், அவரது, 'பஜாஜ் பல்சர்' வாகனத்தில் சென்றனர். இதில், சிவா மட்டும், 'ஹெல்மெட்' அணிந்திருந்தார்.


கண்காணிப்பு


நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., எதிரே, தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற, தடம் எண், 'ஏ 51' மாநகர பஸ்சை, சிவா, வேகமாக முந்திச் செல்ல முயன்றார். அப்போது, பஸ்சுக்கு இணையாக, மற்றொரு இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தது.

பஸ்சுக்கும், இருசக்கர வாகனத்திற்கும் இடையே இருந்த, குறைந்த இடைவெளியில், சிவா ஓட்டி வந்த வாகனம் நுழைந்தது. அப்போது, அவரது வாகனம், பஸ்சில் உரசியதில், நிலை தடுமாறி, சிவா உள்ளிட்ட மூவரும், பஸ்சுக்கு முன், சரிந்து விழுந்தனர். மற்றொரு இருசக்கர வாகன ஓட்டி, இடதுபுறமாக விழுந்தார்.பஸ் வேகமாக வந்ததால், கண் இமைக்கும் நேரத்தில், கீழே விழுந்த மூவரும், பஸ்சுக்கு அடியில் சிக்கினர்.

இதில், பவானி, நாகலட்சுமி இருவரும், பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியாகினர். சிவா, பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரு பெண்களின் உடல்களும், ராயப்பேட்டை மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இவர்களது உறவினர்கள், ஆந்திராவில் இருந்து, நேற்று இரவு சென்னை வந்தனர். இன்று, பிரேத பரிசோதனை செய்து, இருவரின் உடல்களும், அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என, போலீசார் கூறினர்.

கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து நடந்த இடத்தில் இருந்த, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், சிவா அதிவேகமாக செல்ல முயன்று, விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. விபத்து குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், பஸ் ஓட்டுனர், குணசேகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.விதியை மீறி, ஒரே இருசக்கர வாகனத்தில், மூவர் பயணித்து, அதில் இருவர் பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஜூலை-201912:51:41 IST Report Abuse
skv srinivasankrishnaveni 2 வீலெர்ஸ் லே மூவடாக ஹெல்மெட்டைபோடாதைக்குவந்தது மாபெரும் தப்பு முந்தி செல்லமுயன்றதும் தப்பு பஸ் ஊட்டியவரின் நிலைமை யோசிக்கவும் வேண்டுமென அவர் இவாமீது மோதவே இல்லீங்க
Rate this:
Share this comment
Cancel
Emperor SR - Ooty,இந்தியா
18-ஜூலை-201915:08:28 IST Report Abuse
Emperor SR இத்தனை சாட்சிகள் இருந்தும், CCTV கேமரா தடயங்கள் இருந்தும், மற்ற வாகன ஓட்டிகளிடமும் பேருந்து பயனியரிடமும் விசாரித்தும் தெளிவாக அது பல்சர் பைக் ஒட்டிய இளைஞனின் தவறு என்று மிக தெளிவாக தெரிந்த பின்பும் என்ன காரணத்திற்காக மாநகர பேருந்து ஓட்டுநர் குணசேகரனை கைது செய்துள்ளது காவல் துறை.. எப்போதும் இந்த மாதிரி விபத்துகளில் விசாரணை இன்றி பெரிய வாகனத்தின் ஓட்டுனரை கைது செய்வது கேலிக்கூத்து..நமது நடைமுறைக்கு ஒவ்வாத சட்டங்களின் இன்னொரு வீண் செயல் ithu... பாவம் பஸ் ஓட்டுநர் இனி வழக்கு னு கோர்ட் சென்றே எதனை வருடங்கள் வீணாக போகுதோ
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201912:57:58 IST Report Abuse
Naushad Babjohn பஸ் டிரைவர் மேல் எந்த தவறும் இல்லாதபோது அவரை ஏன் கைது செய்ய வேண்டும். விசானையோடு அவரை விடுவிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X