எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சம்பளம், 'கட்'
கடைகளை திறக்காவிட்டால் சம்பளம், 'கட்'
ரேஷன் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

'ரேஷன் கடைகளை திறக்காமல், போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என்று, ரேஷன் ஊழியர்களை, கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.

கடை,சம்பளம் கட்,ரேஷன் ஊழியர்கள்,அரசு,எச்சரிக்கை


கூட்டுறவு துறையின் கீழ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, கூட்டுறவு மொத்த பண்டக சாலை உள்ளிட்டவை, ரேஷன் கடைகளை நடத்தி வருகின்றன. இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு வழங்குமாறு, அரசுக்கு, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதற்கான பணிகள், 2018ல் துவக்கிய நிலையில், இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால், ரேஷன் ஊழியர்கள், பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, சில ஊழியர்கள், கடைகளை திறக்காமல், போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பொருட்கள் வாங்க முடியாமல், பொது மக்கள் சிரமப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.

மேலும், கடைகளை தாமதாக திறப்பதால், கூட்டநெரிசலில் சிக்கி, பலரும் அவதிப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, குறித்த நேரத்தில் கடையை திறக்காதது, கடைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவது, கடைகளை திறந்து விட்டு, போராட்டத்திற்கு செல்வது

Advertisement

போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு, கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுத்தால், அவர்களுக்கு மாற்று ஊழியர்களை நியமித்து, கடைகளை சரியான நேரத்திற்கு திறப்பதை உறுதி செய்யுமாறும், தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
17-ஜூலை-201923:18:55 IST Report Abuse

PANDA PANDIஅரசன் அன்று கொள்ளும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X