கோவில் வாசலில் மூவர் கொலை

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (1)
Advertisement

அனந்தபுர் : ஆந்திராவில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர், சிவன் கோவில் வாசலில், கழுத்தறுத்து கொலையுண்டு கிடந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதையலுக்காக இவர்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக, கிராம மக்கள் தெரிவித்தனர்.ஆந்திராவில், முதல்வர், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அனந்தபுர் மாவட்டத்தில், கார்டிகோட்டா என்ற கிராமம் உள்ளது.

இங்கு, சிறிய சிவன் கோவில் ஒன்று உள்ளது. போலீஸ் மறுப்புஇந்த கோவிலின் வாசலில், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்தன; கோவிலுக்குள்ளும் ரத்தம் படிந்து இருந்தது.போலீசார் நடத்திய விசாரணையில், பலியான பெண்களின் பெயர், சத்தியலட்சுமி மற்றும் கமலம்மா என்றும், ஆணின் பெயர், சிவராமி ரெட்டி எனவும் தெரிந்தது.இதில், கமலம்மா என்பவர், சிவராமி ரெட்டியின் சகோதரி என்பதும் தெரிய வந்தது. இவர்கள் மூவருக்கும், 50 முதல், 55 வயதுக்குள் இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர் .

இந்த கிராமத்தில் மறைத்து வைக்கப்பட்டு உள்ள புதையலை கண்டுபிடிப்பதற்காக, இவர்கள் மூவரும் நரபலி கொடுக்கப்பட்டதாக, கிராம மக்கள் தெரிவித்தனர்.இதை, போலீஸ் தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது.இது குறித்து, இன்ஸ்பெக்டர் மன்சுருதீன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்த கோவில், மொத்தமே ஆறுக்கு ஆறடி அளவில் மிகச் சிறியதாக உள்ளது. இங்கு, நரபலி கொடுத்ததாக வரலாறுகள் இல்லை. போலீஸ் விசாரணையை திசை திருப்ப, கொலையாளிகளே கோவிலுக்குள் ரத்தத்தை தெளித்திருக்கலாம்.

விசாரணை மேலும், கொலையான பெண்களின் உடலில், 100 கிராமிற்கும் அதிகமான தங்க நகைகள் இருந்தன; அவை திருடப்படவில்லை. எனவே, பணத்திற்காக செய்யப்பட்ட கொலையும் இல்லை. கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜூலை-201909:49:55 IST Report Abuse
தமிழ்வேல் கொலை புரிந்தவன் பணக்காரனாக இருக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X