ஐ.எம்.ஏ., குழும உரிமையாளரிடம் முதல்வர், ரூ.20 கோடி வாங்கினாரா?

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (23)
Advertisement
   ஐ.எம்.ஏ., குழும உரிமையாளரிடம்  முதல்வர், ரூ.20 கோடி வாங்கினாரா?

பெங்களூரு:கர்நாடகத்தில், நிதி மோசடியில் சிக்கி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, ஐ.எம்.ஏ., குழும உரிமையாளரிடம், முதல்வர் குமாரசாமி, 20 கோடி ரூபாய் பணம் பெற்றதாக, காங்கிரஸ், எம்.எல்.ஏ., ரோஷன் பெய்க், போலீஸ் விசாரணையில் கூறினார் என, கன்னட செய்தி சேனல் ஒன்று, நேற்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டது.
ஐ.எம்.ஏ., குழும நிதி மோசடி தொடர்பாக, சிவாஜி நகர் காங்கிரஸ், எம்.எல்.ஏ., ரோஷன் பெய்க்கை, நேற்று முன்தினம் இரவு, சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்து விசாரித்தனர். குற்றவியல் துணை கமிஷனர், கிரிஷ் தலைமையில், ரோஷனிடம் விசாரணை நடந்தது.




அப்போது, ரோஷன் கூறியதாக, கன்னட செய்தி சேனல் ஒன்றில் வெளியான தகவல்கள்:
'நான் சொல்லும் அனைத்தையும் கவனமாக கேளுங்கள். ஐ.எம்.ஏ., குழும உரிமையாளர் முகமது மன்சூர் கான், முதல்வர் குமாரசாமியிடம், ஐந்து கோடி ரூபாய் கொடுத்தார். பணம் போதாது என, முதல்வர் கடும் கோபமடைந்தார். பின், 20 கோடி ரூபாய் கொடுத்ததும் அமைதியானார்.இது போல, இன்னும் பல தலைவர்கள் பணம் பெற்றுள்ளனர். அவர்களின் பெயர்களையும் சொல்கிறேன். இதை, 'வீடியோ'வில் பதிவு செய்ய வேண்டும்' என, ரோஷன் கூறினார்.இதை கேட்டு விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். துணை கமிஷனர், கிரிஷ், விசாரணையை பாதியில் நிறுத்தி, முதல்வருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் பின், விசாரணையை, 19 ம் தேதி நடத்தலாம்; அன்றைக்கு வாருங்கள் என, ரோஷனை வீட்டுக்கு அனுப்பினர். இவ்வாறு, அந்த செய்தி சேனல், தகவல்களை வெளியிட்டது.


Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201912:59:47 IST Report Abuse
Balakrishnan Gurumurti ரோஷன் பைக் என்ன பொய் சொல்ல மாட்டாரா என்ன? ஒரு வேளை பிஜேபி இந்தமாதிரி பைக் சொல்லாவிட்டால் அவரை விஜாரிக்கும் அதிகாரிகள் அப்படி சொல்லாவிட்டால் உன்னை கைது செய்வோம் என்று என்ன சொல்லமாட்டார்கள் என்பது நின் உறுதி ?
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
17-ஜூலை-201911:47:38 IST Report Abuse
I love Bharatham பிஜேபி ஆட்சி அமைப்பது உறுதி ஆகி விட்டது
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
17-ஜூலை-201910:10:06 IST Report Abuse
krishna இதுல என்ன மிக பெரிய பிரச்னை என்றால் பணம் முதலீடு செய்து நஷ்டப்பட்டது எல்லாம் முஸ்லீம் சகோதரர்கள். கொள்ளை அடித்தது காங்கிரஸ் மற்றும் குமாரு குரூப். இதில் நிறைய தீவிரவாதியாக மாறுவார்கள். கேட்டால் பணம் முதலீடு செய்தோம் ஏமாற்றப்பட்டோம் அதனால் குண்டு வைத்தோம் என சொல்லுவார்கள். உடனே செகுலர் நகர அறிவு ஜீவிகள் இதற்க்கு rss மற்றும் மோடி என்னும் தீய சக்திதான் கரணம் என கூவுவார்கள்.எப்போதும் இப்படித்தான் மக்களை முட்டாளாக்க காங்கிரஸ் மற்றும் விஷ ஜந்துக்கள் முயற்சி செய்யும்.இதுதான் இந்தியாவின் nilai
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X