கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரவுடிகள் கொலை: நால்வர் கைது

Added : ஜூலை 17, 2019
Share
Advertisement
தாம்பரம்:முன்விரோதம் காரணமாக, ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நால்வர் கைது செய்யப்பட்டனர்.மேற்கு தாம்பரம், கடப்பேரி, அற்புதம் நகரைச் சேர்ந்தவர், பிரதீப் குமார், 30. இவரும், கிழக்கு தாம்பரம், ஆதி நகரைச் சேர்ந்த, சுரேஷ், 29, என்பவரும் நண்பர்கள்.ரவுடிகளான இருவரும், 14ம் தேதி, கடப்பேரியைச் சேர்ந்த, ரங்கநாதன் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு, சரமாரியாக

தாம்பரம்:முன்விரோதம் காரணமாக, ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நால்வர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு தாம்பரம், கடப்பேரி, அற்புதம் நகரைச் சேர்ந்தவர், பிரதீப் குமார், 30. இவரும், கிழக்கு தாம்பரம், ஆதி நகரைச் சேர்ந்த, சுரேஷ், 29, என்பவரும் நண்பர்கள்.ரவுடிகளான இருவரும், 14ம் தேதி, கடப்பேரியைச் சேர்ந்த, ரங்கநாதன் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு, சரமாரியாக தாக்கினர்.இதையடுத்து, ரங்கநாதனின் உறவினர் ஜெயபாபு என்பவர், பிரதீப் குமாரின் தந்தை, சுகுமாரை தாக்கினார்.இதனால், இரு தரப்பினருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம், அற்புதம் நகர், கலங்கல் தெருவில் இருந்த பிரதீப்குமார், சுரேஷ் ஆகியோரை, மர்மநபர்கள், அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.சம்பவம் குறித்து வழக்கு பதிந்த, தாம்பரம் போலீசார், அற்புதம் நகரைச் சேர்ந்த, பூபாலன், 43, ஜெயபாபு, 32, மணிகண்டன், 26, அன்பழகன், 36, ஆகிய நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களும், நேற்று மாலை, தனித்தனியாக தாம்பரம், மின்மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.அசம்பாவிதங்களை தடுக்க, அப்பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X