பார்லி. கூட்டத் தொடர் நீட்டிக்கப்படுமா?| Dinamalar

பார்லி. கூட்டத் தொடர் நீட்டிக்கப்படுமா?

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (2)
பார்லி. கூட்டத் தொடர் நீட்டிக்கப்படுமா?

பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம் முடிந்ததும், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், பிரகலாத் ஜோஷி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:அமைச்சர்கள், தவறாமல் சபைக்கு வர வேண்டியதன் அவசியத்தை, பிரதமர் வலியுறுத்தினார்.





மேலும், இந்த கூட்டத் தொடர், வரும், 26ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏராளமான மசோதாக்கள் நிலுவையில் உள்ளதால், தேவைப்பட்டால், கூட்டத் தொடரை, மேலும் நீட்டிக்க பரிந்துரைக்கலாம் என்றும்,பிரதமர் கூறினார்.நடப்பு லோக்சபாவில், பெரும்பாலான, எம்.பி.,க்கள் புதியவர்கள் என்பதால், அவர்கள், தங்கள் தொகுதிகளில், சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றும், பிரதமர் வலியுறுத்தினார். எப்போதும், முதலில் செய்யும் பணி தான், மக்களின் மனதில் கடைசி வரை இடம்பிடித்திருக்கும் என்பதால், முதல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றும், பிரதமர் கூறினார்.காசநோயை, 2030க்குள் ஒழிக்க வேண்டும் என, சர்வதேச அளவில் இலக்கு நிர்ணக்கப்பட்டுள்ளது; ஆனால், நாம், நம் நாட்டிலிருந்து, 2025க்குள்ளேயே, அந்த நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என்றும், பிதரமர் தெரிவித்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X