பொது செய்தி

தமிழ்நாடு

வறுமைக்கோடு... அறிய பெரும் பாடு! வீடு வீடாக மாநகராட்சி ஆய்வு

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 வறுமைக்கோடு... அறிய பெரும் பாடு! வீடு வீடாக மாநகராட்சி ஆய்வு

கோவை:கோவை மாநகர பகுதியில், ரூ.2,000 நிதியுதவி கேட்டு விண்ணப்பித்தவர்களின் உண்மை நிலையை அறிய, மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்கின்றனர்.
பொங்கல் பண்டிகை கொண்டாட, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கியதைபோல், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு, மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது.மொத்தம், 64 ஆயிரத்து, 898 குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பதாக, 2003ல் எடுத்த பயனாளிகள் பட்டியல், கோவை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. 'அவுட் சோர்சிங்' முறையில் பணியாளர் நியமிக்கப்பட்டு, வீதி வீதியாக ஆய்வு செய்யப்பட்டது.பலர் இடம் பெயர்ந்து இருப்பதும், பலரது பெயருக்கு முகவரி இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட முகவரியில், 29 ஆயிரம் விண்ணப்பதாரர்களே இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதன்பின், பொதுமக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களை மறுக்காமல் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியது. அப்போது, மாநகராட்சி பகுதியில் மட்டும், 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில், ஒரு லட்சத்து, 25 ஆயிரம் விண்ணப்பங்களே, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உகந்ததாக இருந்தன. இவற்றையும் வீடு வீடாகச் சென்று, உண்மையை ஆய்வு செய்து அறிய உத்தரவிடப்பட்டுள்ளது.நிஜமாகவே வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கிறார்களா; சொந்த வீடா, வாடகை வீடா, குடிசையா, கான்கிரீட் வீடா, என்பன உள்ளிட்ட விவரங்களை, மாநகராட்சி சுகாதார ஊழியர்கள், வார்டு வார்டாகச் சென்று, ஆய்வு செய்து, உண்மைத்தன்மையை பதிவிடுகின்றனர்.
பெண்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்க இருப்பதால், குடும்ப தலைவி பெயர் விபரங்களையும், சேகரித்து பதிவிட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மாற்ற வேண்டும்மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஆண்டுக்கு, ரூ.72 ஆயிரம் வருவாய் ஈட்டுவோர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்கிற நடைமுறை பின்பற்றப்படுகிறது; இது தவறு. ஏனெனில், ஒப்பந்த துப்புரவு தொழிலாளிக்கு தினக்கூலியாக ரூ.350 கொடுக்கிறோம். ஓராண்டுக்கு குறைந்த பட்சமாக ஒரு லட்ச ரூபாய்க்கு மேலாக சம்பாதிக்கின்றனர். அவர்களை வறுமைக்கோட்டுக்கு மேலானவர்கள் என எப்படி கணக்கெடுக்க முடியும். அதனால், வறுமைக்கோட்டுக்கு கீழானவர்கள் வருமானத்தை உயர்த்தி, நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
17-ஜூலை-201914:10:48 IST Report Abuse
முதல் தமிழன் Hello what is the procedure? There are more than 70% no government jobs. From private sector more than 85% less salaried difficult to run day to day life. Balance suffering to get single time kanji. Please don't do this research to pacify Modiji and his group. They will be thrown out very quickly. Now north Indians felt why voted to him. Better make a draft procedures then we see how best we can help.
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
17-ஜூலை-201913:30:14 IST Report Abuse
Needhiyin Pakkam Nil அரசு ஏன் வீடு வீடாக போக வேண்டும், பணம் வேண்டுமென்றால் அவன் அரசை தேடி நேர்மையுடன் வரட்டும், ஒரு தனி மனிதனுக்கு பெரும்பாலும் வருமானம் எப்படி வருகிறது சரியான வழி என்றால் மாத சம்பளம், வங்கி வட்டி அல்லது வட்டி தொழில்,சொத்தின் மூலம் வாடகை, தொழில் வியாபாரம், பங்கு மார்க்கெட், மீச்சுவல் பண்டு, நன் கொடை, தவறான வழிகள் என்றால் திருட்டு, லஞ்சம், ஊழல், பினாமி, இதை தவிர வேறு ஏதாவது வழிகள் உண்டா, யாருக்கெல்லாம் ரூ 2000 வேண்டுமோ அவர்களெல்லாம் வருமான வரித்துறையிடம் சென்று தங்களின் சொத்து மற்றும் வருமானம், வங்கி கையிருப்பு விபரங்களை வருமான வரித்துறையின் சோதனைக்கு உட்படுத்தி இறுதியில் நான் ஏழை சான்றிதழ் பெற வேண்டும் என்று ஒரு நடைமுறையை கொண்டு வாருங்கள் பிறகு உண்மையான ஏழைகளை கண்டறிந்து சலுகைகளை கொடுங்கள், ஆனால் வருமான வரித்துறை ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கொண்டு சான்றிதழ் கொடுப்பவராக இருந்தால் அது அரசின் தவறு..
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
17-ஜூலை-201910:40:43 IST Report Abuse
நக்கீரன் இப்படி ஒரு அரசை எங்காவது பார்க்க முடியுமா? அறிவில்லாத மக்களுக்கு அறிவில்லாத அரசு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X