பொது செய்தி

இந்தியா

எதற்கும் தயாராக உள்ளோம்: விமானப்படை தளபதி

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
air force,chief,Dhanoa,எதற்கும் தயார், விமானப்படை, தளபதி,தனோவா

புதுடில்லி : எந்த வகையான சூழ்நிலையிலும் உடனடியாக களமிறங்க விமானப் படை எப்போதும் தயாராக உள்ளது' என விமானப் படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்தார்.


latest tamil newsஜம்மு - காஷ்மீர் மாநிலம் கார்கிலில் நடந்த போரின் 20வது ஆண்டையொட்டி டில்லியில் நேற்று(ஜூலை 16) நடந்த கருத்தரங்கில் விமானப் படையின் தலைமை தளபதி தனோவா கூறியதாவது: கடந்த 1999ல் நடந்த கார்கில் போரில் 17வது ஸ்குவாட்ரனின் தலைவராக பங்கேற்றேன். அப்போது நமது விமானப் படைக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தன. மிராஜ் - 2000 போர் விமானத்தில் மட்டுமே குண்டு திறன் இருந்தது. தற்போது நமது அனைத்து விமானங்களிலும் இந்த வசதி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நாம் பல முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.


latest tamil newsகார்கில் போரின்போது இக்கட்டான கட்டத்தில் இரவு நேரத்தில் பனிமலையில் குண்டுகளை திறமையாக வீசி வெற்றி பெற விமானப் படை உதவியது. ஜம்மு - காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது நம் விமானப் படையின் திறமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-ஜூலை-201913:41:37 IST Report Abuse
Malick Raja இது சாதாரணமாகவே இருக்கவேண்டிய ஒன்று.. எதர்க்கும் தயாராக இருக்காமல் விமானப்படை இருக்கமுடியுமா? என்னய்யா இது தளபதி இப்படியா பேசுவது .. எதிரிகளின் சூழ்ச்சிகளை வெற்றிகொள்வதற்கு எங்களிடம் போதுமான வல்லமை இருக்கிறது என்றல்லவா சொல்லவேண்டும்.. இந்திய நாட்டுக்கிணையான எதிரி சீனா மட்டும்தான்.. மற்ற நாடுகளை மாநில காவல்துறைகளே போதுமானதாக இருக்கும்
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
17-ஜூலை-201915:29:09 IST Report Abuse
Nallavan Nallavan\\\\ மற்ற நாடுகளை மாநில காவல்துறைகளே போதுமானதாக இருக்கும் //// அப்பப்போ நீங்களும் ஜோக் கடிக்கிறீங்க ........
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
17-ஜூலை-201911:17:19 IST Report Abuse
Sridhar இப்போவே இப்படின்னா இன்னும் கொஞ்ச நாளில் ரபால் வேற வந்துடும். அப்புறம் இவிங்கள பிடிக்க முடியாதே? போய் பயமுறுத்திட்டு வா நா அழிச்சுட்டு வந்துடுவாங்க போலருக்கே?
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
17-ஜூலை-201908:13:06 IST Report Abuse
Nallavan Nallavan கார்கில் தினம் ..... ஓகே ..... ஆனா எதுக்கும் ரெடி -ன்னு சொல்றதுக்கு அப்படி என்ன சூழ்நிலை வந்திருச்சு ??
Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
17-ஜூலை-201909:39:57 IST Report Abuse
DSM .S/o PLM எந்த ஒரு நிகழ்ச்சி நடக்கும்போதும் அந்த துறையை சார்ந்த சில பெருமையான விஷயங்களை சொல்வது வாடிக்கை. அப்போது பலரால் பல நேரங்களில் பலவாறு எழுப்ப படும் கேள்விகளுக்கு பொதுவான விளக்கம் தரும் வகையிலான ஒரு பதிலை தனது துறைசார்ந்த விஷயங்களோடு சேர்ந்து பகிர்ந்து கொள்வது இயல்பான ஒன்றுதான். ஏன் ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் தியாகிகளை நினைவு கூறும்போது காந்தி அதை செய்தார் இதை செய்தார் என்று சொல்கிறோம்? அதுதான் ஒண்ணாம் கிளாஸ் முதல் தினமும் கேட்கும் டிவி நியூஸ் வரை படித்து படித்து புளித்து போன விஷயமாயிற்றே .. அதேபோலத்தான் இதுவும் ....
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
17-ஜூலை-201910:44:04 IST Report Abuse
Nallavan Nallavanவிரிவாகவே பதில் அளித்துள்ளீர்கள் .... நன்றி .........
Rate this:
Naga - Muscat,ஓமன்
17-ஜூலை-201911:41:38 IST Report Abuse
Nagaஜாதிகள் இல்லையடி பாப்பா....
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
17-ஜூலை-201912:41:12 IST Report Abuse
THENNAVANவெட்கம் இல்லாத கேள்விகளை கேட்பதே உங்கள் தொழிலாக போய்விட்ட்து....
Rate this:
vivek c mani - Mumbai,இந்தியா
17-ஜூலை-201913:48:46 IST Report Abuse
vivek c maniதமிழ்நாட்டில், இந்தியா எல்லையிலிருந்து 2000 கி.மீ மேலான தூரத்தில் காப்பாக இருப்பவர்களுக்கு அவர் கூறுவது எப்படி புரியும் ? எல்லைபுர மாகாணங்களில் தினந்தோறும் நடக்கும் எதிரிகளின் ஊடுருவல்களையும், ஆக்ரமிப்புகளையும் ,உயிர் சேதத்தையும் அனுபவிப்பர்களுக்கே விமானப்படை அதிகாரி கூறும் சொற்களின் மதிப்பு தெரியும். தான் அடி பட்டு சாகாததால் ராணுவ வீரர்கள் கூற்று கேலி செய்யப்படுவதை சில தமிழ் நாட்டு மக்களிடமே காண முடியும். எல்லை புறத்திற்கு சென்று ஒரு வாரம் இருந்து விட்டு வாரும். விமானப்படை தளபதியின் சொல்லின் மகிமை புரியும். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவை குறி வைத்து தாக்கி ஆக்கிரமித்த வெளிநாட்டு கொடுங்கோலர்கள் பலர் இன்றும் இந்தியாவை தாக்க தருணம் பார்த்துக்கொடுத்தானிருக்கிறார்கள். அடிபட்டிருந்தால்தானே வலி எப்படி இருக்கும் என தெரிந்து இருக்கும்....
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
17-ஜூலை-201915:27:16 IST Report Abuse
Nallavan Nallavanஇளக்காரமாகச் சொல்வதாக நீங்கள் எண்ணிவிட்டீர்கள் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X