பொது செய்தி

இந்தியா

திருப்பதியில் வி.ஐ.பி., தரிசன முறை விரைவில் ரத்து

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (17)
Advertisement

திருப்பதி: நாட்டின் பணக்கார சுவாமியாக கருதப்படும், திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க செல்லும் பக்தர்கள் அனைவருக்கும், சம வாய்ப்பு விரைவில் கிடைக்க உள்ளது. அதற்கு இடையூறாக இருக்கும், 'வி.ஐ.பி., பிரேக் தர்ஷன்' முறை, விரைவில் நீக்கப்பட உள்ளது.நாள் தோறும், சராசரியாக, 80 ஆயிரம் முதல், ஒரு லட்சம் பக்தர்கள், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்கின்றனர். இதற்காக, எவ்வித கட்டணமும் இல்லாத, தர்ம தரிசன வரிசை உள்ளது. குறைந்தபட்சம், 6 - 12 மணி நேரம் காத்திருந்து, சுவாமியை தரிசிக்க முடியும். இது தவிர, கட்டண தரிசனம், வி.ஐ.பி.,கள் தரிசனம் போன்ற தரிசன முறைகளும் உள்ளன. வெங்கடாஜலபதியை தரிசிக்க வரும், வி.ஐ.பி.,களின் அந்தஸ்துக்கு ஏற்ப, பொது தரிசன வரிசை தடுத்து நிறுத்தப்படும்; வி.ஐ.பி.,கள் நிதானமாக தரிசனம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்படும்.

தினமும், நான்கைந்து முறை, வி.ஐ.பி., தரிசன வசதி அளிக்கப்படுகிறது. அந்த நேரத்தில், தர்ம தரிசனம் மற்றும் பிற வரிசைகளில் வருவோர், சில நேரங்களில், அதிகபட்சம், ஆறு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதை எதிர்த்து, நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள, ஆந்திர முதல்வர், ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினர், ஒய்.வி.சுப்பா ரெட்டி, வி.ஐ.பி., தரிசன முறையை ரத்து செய்ய முன்வந்துள்ளார். இரண்டொரு வாரங்களில், இதற்காக, திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகக்குழு கூட்டம் கூட உள்ளது. அதில், வி.ஐ.பி., தரிசனத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.முன்னுதாரணம்


துணை ஜனாதிபதி, வெங்கய்யா நாயுடு, ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். திருப்பதிக்கு சமீபத்தில் வந்த இவர், சாதாரண பக்தர்கள் செல்லும் வரிசையில், குடும்பத்தினருடன் சென்று, சுவாமியை தரிசனம் செய்தார். இதற்காக, 'வைகுண்டம் க்யு காம்ப்ளக்ஸ்' வழியாக சென்றார். தரிசனத்திற்கான கட்டணத் தொகையையும் அவர் செலுத்தினார். அவரின் தரிசனத்திற்காக, பக்தர்கள் நிறுத்தப்படவில்லை. வழக்கமாக, வி.ஐ.பி.,கள், 'மஹாதுவாரம்' என்ற வழியில், கோவில் நிர்வாகிகளால் அழைத்துச் செல்லப்படுவர்.


வி.ஐ.பி.,கள் வகை:


திருப்பதிக்கு வரும், வி.ஐ.பி.,கள், எல் - 1, எல் - 2, எல் - 3 என்ற பிரிவுகளில் வகைபடுத்தப்படுகின்றனர். ஜனாதிபதி, பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள் போன்றோர், எல் - 1 பிரிவில் வருகின்றனர். அரசின் மூத்த அதிகாரிகள், எல் - 2 பிரிவில் வருகின்றனர். வி.ஐ.பி.,கள் மற்றும் திருப்பதி, திருமலை தேவஸ்தான நிர்வாகிகளின் சிபாரிசு கடிதங்களை பெற்றுள்ளவர்கள், எல் - 3 பிரிவில் வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
21-ஜூலை-201906:38:40 IST Report Abuse
kalyanasundaram EXCELLENT DECISION GOD BLESS THOSE CONCERNED FOR THIS ACTION.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai,இந்தியா
17-ஜூலை-201912:29:54 IST Report Abuse
Balaji தமிழ் மைந்தன் அவர்களே, நான் அந்த நடவடிக்கையை எதிர்க்கவில்லை, மற்ற மதத்தினரின் செயல்பாடுகளைத்தான் எதிர்க்கிறேன், ஜெகமோகனும் அவருடைய குடும்பமும் கிறிஸ்துவர்கள், அவருடைய மாமன் தான் இப்போது தேவஸ்தான தலைவர், இவருக்கும் தேவஸ்தானத்துக்கும் என்ன சம்மந்தம் ?? அங்கே குவியும் நிதியை சுருட்டி தங்களுடைய மதமாற்ற தேவையை நிறைவேற்றிக்கொள்வார்கள், இதற்காகத்தான் அலைகிறது இந்த கும்பல், மற்றபடி இதில் சிறப்பு தரிசனத்தை ரத்து செய்வதென்பது வெறும் நாடகம் மட்டுமே நிஜத்தில் சாத்தியமில்லாதது. தேவாலயத்திலோ, மசூதியிலோ ஹிந்துக்கள் யாரேனும் தலைவராக முடியுமா சொல்லுங்கள்? அவர்கள் மட்டும் அவரவர் மத பற்றாளர்களாக இருக்க வேண்டும், ஆனால் ஹிந்துக்கள் மட்டும் மதச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூவுவது சரியா? போலி வேஷம் போடும் திமுக மற்றும் அதனுடைய அள்ள கைகள் அனைத்தையும் மொத்தமாக தீவிரவாத இயக்கங்களாக அறிவித்தால் மட்டுமே தமிழ்கத்தில் ஒற்றுமை நிலவும், மதமாற்றம் குறையும், மற்ற சிறிய கட்சிகள் வளரும். அதிமுக ஓரளவு பரவாயில்லை தேவைப்பட்டால் அவர்களையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.   
Rate this:
Share this comment
Cancel
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201910:55:37 IST Report Abuse
Raj திருப்பதி போன்ற கோவில்களில் மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை மாற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே டோக்கன் மூலம் 6 மணி நேரத்துக்குள் தரிசனம் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காத்திருக்கும் மக்கள் சுகாதாரமான முறையில், மரியாதையுடன் நடத்த நடவடிக்கை வேண்டும். குறிப்பாக குடி தண்ணீர் இலவசமாக கிடைக்க வழி செய்ய வேண்டும். கடவுளின் முன் கும்பிடும் இடத்தில கன்வேயர் பெல்ட் போன்ற முறை கொண்டு வந்து கண்டபடி சத்தம் போடுவது, தள்ளி விடுவது நிறுத்தப்பட வேண்டும். ஒரு நேரத்தில் 15 பேருக்கு மேல் கர்ப்ப கிரஹத்தின் முன்னர் நிற்காமல் தரிசனம் கிடைக்க வழி செய்ய வேண்டும். இதுவே மக்களுக்கு செய்யும் பெரிய சேவை.
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
17-ஜூலை-201913:39:11 IST Report Abuse
sivan சரியான யோசனை. பதினைந்து அல்லது இருபது பேர் மட்டும் பார்க்கும் கன்வேயர் பெல்ட் சிஸ்டம் நல்ல தீர்வாக இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X