பொது செய்தி

இந்தியா

'டிபன்ஸ் காரிடார்' திட்டம்: ராணுவ அமைச்சர் ஆய்வு

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (11)
Advertisement
Rajnath Singh, Defence corridor, UP, Tamil Nadu, டிபன்ஸ் காரிடார், திட்டம், ராணுவ அமைச்சர், ஆய்வு

புதுடில்லி: சென்னை - கோவை உட்பட, 'டிபன்ஸ் காரிடார்' திட்ட அமலாக்கப் பணிகளை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைவுப்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ராணுவ தளவாடப் பொருட்களை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வற்காக, கடந்த, 2018ம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இரண்டு 'டிபன்ஸ் காரிடார்' திட்டங்களை அறிவித்தார். முதலாவது, டிபன்ஸ் காரிடார், தமிழகத்தில் சென்னையை மையமாக கொண்டு, தொழில் நகரங்களான கோவை, திருச்சி, சேலம், ஒசூரை இணைக்கும் விதத்தில், அமைக்கப்படுகிறது. இரண்டாவது, 'டிபன்ஸ் காரிடார்' உத்தரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்படுகிறது.

இதற்கு முன்னோட்டமாக, அப்போதைய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சியால், நமது நாட்டின் ராணுவத் தளவாட உற்பத்தித் திறனை வெளிப்படுத்தும் வகையில் சென்னை, கோவையில் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. கோவையில், ஏற்கனவே ராணுவத்தளவாட உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், 'டிபன்ஸ் காரிடார்' பணிகளின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும், இதுவரை நடந்துள்ள அமலாக்கப் பணிகள் குறித்தும், டில்லியில் நேற்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆய்வு செய்தார். அப்போது, 'டிபன்ஸ் காரிடார்' பணிகளை துரிதப்படுத்துமாறு, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


இதில் முதலீடு வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்தும், கட்டமைப்பு பணிகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். ஆய்வுக் கூட்டத்தில், ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தனியார் நிறுவனங்களுக்கும் விருதுராணுவ தளவாடப் பொருட்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுவது போல், தனியார் நிறுவனங்களுக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்க ராணுவ அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தியில் சிறந்த பங்காற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு, ராணுவ அமைச்சரின் சிறந்த சேவை விருது வழங்கப்படுகிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் விதத்தில், தேசிய அளவிலான இந்த விருதுக்கு தனியார் நிறுவனங்களும் போட்டியிடலாம். இதற்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒப்புதல் அளித்தார். தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள், குழுவினர் என தனித்தனியாக விருதுகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMANATHAN - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201916:59:30 IST Report Abuse
RAMANATHAN தமிழ்நாடு மக்கள் இலவசம் வாங்கி சந்தோசமா இருக்கிறார்கள். அவர்களை வேலை செய்ய சொன்னால் என்ன பண்ணுவார்கள். இந்த மாதிரி ப்ராஜெக்ட் வந்தால் DMK மற்றும் ADMK கட்சி தலைவர்கள் என்ன செய்வார்கள். அவர்களுக்கு வருமானம் வரும் திட்டம் என்றால் உடனே செயல் படுத்துவார்கள். க்ரானைட் QUARY கேஸ் என்னவாயிற்று. மணல் கொள்ளை என்னாவது......As long as we don't have accountability in our society there is no point in taking about corruption or any projects.....As leaders have been elected by paying money, we cannot expect good governance in the tem....If a common man can go and talk to councillor or ward member or MLA or MP about their common problems then only tem is in place.....As long as tem is not in place, we cannot end corruption and no one is accoun for any action....For example, if there is any water problem we should be able to make sure the MLA/MP / Ward member / Councillor is responsible.....All these water crisis were man made and it is because of the politicians who have encorached all the water bodies...During dravidian parties rule no major dams were built and no major projects were brought to Tamilnadu....Whenever Central government wants to implement the project regional parties do not allow to come as they feel BJP or COngress will get the name and will come to regional politics.....So politicians keep these people in dark by providing TASMAC shops...free electricity..free education...free scooter...free water..free house....free gold coin if girl child...free hajj yatra...free jerusalem yatra..free ......freee...free...free.....So where will the development come....Long way to go...
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
17-ஜூலை-201914:19:19 IST Report Abuse
Sridhar Rengarajan டிஃபன்ஸ் காரிடார், அருகாமையில் துறைமுகம் இல்லாத தமிழகத்தில், தொழில் நகரங்களான கோவை, திருச்சி, சேலம், ஒசூரை இணைக்கும் விதத்தில் அமைக்கப்படுகிறது. அதாவது நோகாம நுங்கு திங்குறாங்களாம். அதுதான் ஏற்கெனவே அது தொழில்நகரங்களாக இருக்கிறதே. அளவுக்கதிகமான தொழிற்சாலைகள், வாகன நெரிசல், மக்கட்தொகை பெருக்கம், பொல்யூஷன் என நாறிப்போய் கிடக்கிறதே. ஏன் விவசாயம் பொய்த்துப்போன, பெரிதாக தொழிற்சாலைகள் எதுவுமில்லாத கடலூரில் இருந்து வேதாரண்யம் கோடியக்கரை வரையிலான காரைக்கால் துறைமுகம் உள்ளடக்கிய பகுதியில் இந்திய ராணுவத்துக்காக கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி புதிதாக டிஃபன்ஸ் காரிடார் ஒன்றை உருவாக்க முடியாதா?
Rate this:
Share this comment
சீனி - Bangalore,இந்தியா
17-ஜூலை-201914:49:48 IST Report Abuse
சீனிகடலூரில் இருந்து வேதாரண்யம் கோடியக்கரை காவிரி பெல்டில் வருகிறது, நெல் விளையும் ஆதாரமே அங்கே தான் உள்ளது. திருவண்ணாமலை, சேலம், தருமபுரி பகுதியில் வளர்ச்சி தேவை, வேலைக்கும் எளிதில் ஆள் கிடைக்கும்....
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
17-ஜூலை-201912:12:53 IST Report Abuse
DSM .S/o PLM எதற்காக தமிழகத்தில் தொழில் துவங்க, தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு இத்துணை முயற்சிகளைமேற்கொள்கிறது. எல்லாமே வீண். இன்றைய சூழலில், பெரும்பாலான தமிழக தொழிற்சாலைகளில் நிர்வாக தரப்பில் பேசப்படும் விஷயம், தமிழக வேலை கலாச்சாரம் ( working culture) மிகவும் மோசம் என்பதுதான்.. தெற்கிலும் வடக்கிலும் கிளைகளை கொண்டுள்ளநிறுவனங்களில் பணிபுரியும் என்போன்றவர்கள் இப்படிப்பட்ட விவாதங்கள் வரும்போது , தமிழன் என்கிற வகையில் தலைகுனிந்து தான் நிற்கிறோம்.. கசப்பான, தர்ம சங்கடமான உண்மை..
Rate this:
Share this comment
sundar - chennai,இந்தியா
17-ஜூலை-201915:31:09 IST Report Abuse
sundarஉண்மை. வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் சிரமம். வரும் ஒண்டிரண்டு பேர்வழிகளும் ஒரு சில மாதம் பயிற்சி முடிந்த பின் ஊதிய உயர்வு கேட்டு வேலைக்கு வருவதில்லை. கசப்பான உண்மை. ஒரு நிறுவனிதின் நிர்வாகி துன்ற முறையில் என் கருத்து பதிவிடுகிறேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X