பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் உற்சவம்: அர்ச்சகர்கள் - போலீசார் வாக்குவாதம்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (65)
Share
Advertisement
அத்திவரதர் உற்சவம், அர்ச்சகர்கள், புறக்கணிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் அத்திவரததை தரிசக்க விஐபிக்கள் செல்லும் பாதையில் செல்ல முயன்ற அர்ச்சகர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சுமார் 20 நிமிடம் தரிசனம் தடைபட்டது.


காத்திருப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 17 ம் நாள் வைபவத்தில் இன்று(ஜூலை 17), அத்திவரதர் மாம்பழ நிறப்பட்டாடையில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் தரிசனம் செய்ய காத்திருந்தனர்.


தடுத்து நிறுத்தம்

இந்நிலையில், அத்திவரதருக்கு பூஜை செய்யும், அர்ச்சகர்கள், விஐபிக்கள் செல்லும் வரிசையில் செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அடிக்கடி விஐபிக்கள் பாதையில் வருவதாக கூறி தடுத்து நிறுத்தினர். இதனையறிந்த அனைத்து அர்ச்சர்களும் அந்த இடத்திற்கு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானபடுத்தினர். இதனையடுத்து, அர்ச்சகர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால், சுமார் 20 நிமிடம் தரிசனம் தடைபட்டது. இதனால், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
17-ஜூலை-201923:37:25 IST Report Abuse
BoochiMarunthu டாக்டர்கையில் தட்டு ஏந்தி சில்லறை கேட்டால் எப்படி இருக்கும் ?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
17-ஜூலை-201923:06:50 IST Report Abuse
Girija @Dr-Muthu Krishnan - Chandigarh,இந்தியா, படிப்பிற்கும் கருத்திற்கும் பொருத்தம் இல்லை, 90 % அர்ச்சகர்கள், புரோகிதர்கள் வாழ்க்கைத்தரம் என்னவென்று உங்களுக்கு தெரியமா? ஒருவர் சம்பாத்தியம் தான், கோவில் வீடோ அல்லது ஒட்டு வீடோ தான். அவர்கள் குழந்தைகளில் நிச்சயம் ஒரு மாற்றுத்திறனாளி குழந்தை இருக்கும், முதிர் கன்னி சகோதரியோ அல்லது பெண்ணோ இருப்பர். இது எப்படி வருகிறது தெரியுமா உங்களை போன்றோருக்கு பித்ரு காரியங்களை செய்து கொடுத்து அவர்கள் தண்டனையை அனுபவிக்கின்றனர். நீங்கள் டாக்டரேட் அல்லது வசூல் ராஜாவோ தெரியவில்லை, அதாங்க எம் பி பி எஸ், உங்களை இப்படி உருவாக்க உங்கள் பெற்றோர் அர்ச்சனை செய்திருக்கலாம் அல்லது வேண்டுதல் நிறைவேற்றி இருக்கலாம் அதை செய்துகொடுத்தவர் இந்த அர்ச்சகர் பரம்பரை தான். இந்த அப்பிராணிகளுக்குத்தான் 10 % ஒதுக்கீடாவது கொடுங்க என்று கேட்கிறோம், இது போல் பிற மதங்களிலும் இருப்பர் அவர்களுக்கும் சேர்த்துதான் கேட்கிறோம்.
Rate this:
sivan - seyyur,இந்தியா
22-ஜூலை-201904:34:32 IST Report Abuse
sivan யாரிடம் கதை சொல்கிறீர்கள்? பித்ரு காரியங்கள் செய்து கொடுப்பதால் அர்ச்சகர்களுக்கு எப்படி தண்டனை கிடைக்கும்? கோவிலில் தெய்வத்தை மட்டுமே கையெடுத்து தொழ வேண்டும் என்பது இந்து மத சாஸ்திரம் சொல்லும் நியதி. ஆனால் இவர்கள் செய்வது என்ன? வருவது சசிகலாவோ , துர்கா ஸ்டாலினோ, வரிச்சியூர் செல்வமோ... சரவநாடியும் ஒடுங்கி அப்படி ஒரு கூழை கும்பிடு போட்டு .....சே நாங்கள்தான் பார்க்கிறோமே? அத்திவாரத்தார் முன் நிற்கும் அத்தனை அர்ச்சகர்களும் எப்படி பிரபலங்களுக்கு சேவை சாத்தினார்கள் என்று...
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-ஜூலை-201921:05:45 IST Report Abuse
Krishnamurthy Venkatesan Dr-Muthu Krishnan - Chandigarh,இந்தியா அவர்களுக்கு, தாங்கள் உத்தமர் போல் பேசுவது சிரிப்பை வருகிறது. பொதுமக்களிடம் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று பணம் தின்னி நீங்கள் பேசுவது வியப்பாக இருக்கிறது. சேவை செய்யும் தொழிலில் இருந்துகொண்டு கொள்ளை வருமானம் பார்க்கிறீர்கள். எத்தனை அர்ச்சகர் தமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுத்திருப்பார், தம் பெண் பிள்ளைகளை நல்ல இடத்தில திருமணம் செய்துகொடுத்திருப்பர், மனைவி குழந்தைகளை வெளியிடங்களுக்கு அழைத்து சென்றிருப்பார்? quota டாக்டர் தான் இப்படி காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவார். ஏனென்றால் அர்ச்சகர் ப்ராஹ்மணன் என்பதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X