இனரீதியாக கருத்து: டிரம்பிற்கு எதிராக தீர்மானம்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
Trump,டிரம்ப், இனரீதி, கருத்து, கண்டன தீர்மானம்,

வாஷிங்டன்: இனரீதியாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக, அந்நாட்டு பார்லிமென்டின் பிரதிநிதித்துவ சபையில் கண்டன தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 240 ஓட்டுகளும், எதிராக 187 ஓட்டுகளும் கிடைத்தன.

அமெரிக்க அதிபர் டிரம்ப், டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'வெளிநாடுகளை பூர்வீகமாக கொண்ட, சில பெண், எம்.பி.,க்கள், நமது அரசு எப்படி செயல்பட வேண்டும் என கருத்து கூறுகிறார்கள். அவர்கள், தங்களுடைய பூர்வீக நாடுகளுக்குச் சென்று, அங்கு குற்றங்களை குறைத்து, ஊழலை ஒழித்துவிட்டு, பிறகு இங்கு வரட்டும்' எனக்கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன ரீதியில் டிரம்ப் பேசியுள்ளதற்கு, எதிர்ப்பு எழுந்துள்ளது. நியூசிலாந்து பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news
இந்நிலையில், டிரம்ப்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க பிதிநிதித்துவ சபையில், '' தங்கள் நிறம் குறித்த பயத்தை புதிய இளம் அமெரிக்கர்களிடம் டிரம்ப்பின் இந்த கருத்துகள் அதிகரித்துள்ளன'' என அவருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சியினர் அதிகம் உள்ள இந்த சபையில், டிரம்ப்பிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 240 ஓட்டுகளும், எதிராக 187 ஓட்டுகளும் கிடைத்தன. டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சியின் நான்கு எம்.பி.,க்களும் ஒரு சுயேட்சை எம்.பி.,யும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
17-ஜூலை-201922:51:20 IST Report Abuse
Rafi இன துவேஷ கருத்திற்கு அதிபரே பேசினாலும் கண்டனத்திற்குள்ளாகின்றார்கள், வாழ்க ஜனநாயகம்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூலை-201916:17:49 IST Report Abuse
Endrum Indian ட்ரம்ப் சொன்னதில் ஒரு சிறு தவறும் இல்லவே இல்லை - அவர் நிறம், இனம், பாலினம் எதுவுமே சொல்லவில்லை.
Rate this:
Cancel
tadj.C - Paris,பிரான்ஸ்
17-ஜூலை-201913:54:12 IST Report Abuse
tadj.C அமெரிக்காவில் முந்தய காலங்களில் இருந்து குடியேறிய வெள்ளையர்கள் (ஐரோப்பா இன மக்கள் )... செவ்விந்தியர் மட்டிலுமே மண்ணின் மைந்தர்கள் ... பிறர் யாவரும் வந்தேறிகள்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
17-ஜூலை-201923:03:56 IST Report Abuse
 Muruga Velசெவ்விந்தியர்களை ஈவு இரக்கமின்றி சுட்டு கொலை செய்து அவர்களின் நிலங்களை கைப்பற்றி அதன் மேல் அமைக்கப்பட்டது தான் அமெரிக்கா ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X