பொது செய்தி

இந்தியா

கேரளாவில் தீவரமாகும் பருவமழை: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (4+ 15)
Advertisement
கேரளா, கனமழை, ரெட் அலெர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு 6 மாவட்டங்களில் இன்று (ஜூலை 17) முதல் 20ம்தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

ஜூலை 18 முதல் 20 வரை இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களிலும், ஜூலை 19 ல் வயநாடு, கண்ணூர் மாவட்டங்களிலும், ஜூலை 20 ல் எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 24 மணி நேரத்தில் 240 மி.மீ., மழை பதிவாகலாம். நிலச்சரிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை 17 இடுக்கி மாவட்டம், ஜூலை 18 ல் கோட்டயம், ஜூலை 19 ல் எர்ணாகுளம், ஜூலை 19, 20 ல் பாலக்காடு, ஜூலை 20ல் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம் அங்கு 115 மி.மீ., முதல் 204.5 மி.மீ., வரை மழை பதிவாகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.







மஞ்சள் நிற எச்சரிக்கை



இந்திய வானிலை மையம், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில்,

ஜூலை 16 : இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர்
ஜூலை 17: கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு கண்ணூர்
ஜூலை 18: திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு
ஜூலை 19: திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம் திரிச்சூர், கோழிக்கோடு, காசர்கோடு
ஜூலை 20: திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.






இதனை தொடர்ந்து, அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறைகளை திறக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு வாய்ப்பு உள்ளதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
17-ஜூலை-201912:59:31 IST Report Abuse
வல்வில் ஓரி நான் எங்க சாமி கிட்ட எங்காளுங்க நல்லாயிருக்கணும் ன்னு தான் வேண்ட முடியும். ..மத்தவங்க அவனுங்களோட சாமி கிட்ட வேண்டிக் கொள்ளட்டும்.... .மன்னிக்கணும் ..எனக்கு என் மக்கள் முக்கியம்.. அதே சமயம் அடுத்தவங்க நாசமா போங்க ன்னு நான் சொல்லல ..
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஜூலை-201911:08:17 IST Report Abuse
A.George Alphonse இந்த கேரளா அரசும் தனது ஸ்டேட்டை வெள்ளத்தில் இருந்த காப்பாற்ற நிச்சயம் நமது ஸ்டேட் க்கு அந்த வெள்ள நீரை திறந்துவிடும்."செல்லும் செல்லாததிற்கு செட்டியார்"போல் நாம் இருக்கிறோம். எல்லாம் நல்லதுக்கே. "வந்தவரை வாழ வைக்கும் நமது வையகம்" கொள்கை ஒருபோதும் பொய்யாகாது. ஆண்டவர் நமது தமிழகத்தை ஒரு போதும் கை விட மாட்டார்.
Rate this:
Share this comment
parthiban - coimbatore,இந்தியா
17-ஜூலை-201911:17:33 IST Report Abuse
parthiban""""செல்லும் செல்லாததிற்கு செட்டியார்""" என்றால் என்ன அர்த்தம் ???...
Rate this:
Share this comment
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஜூலை-201913:07:39 IST Report Abuse
A.George Alphonseஅது ஒரு பெரிய கதை."இந்த நோட்டு செல்லுமா செல்லாத என்பதை அந்த செட்டியாரை கேளுங்கள்" என்று திருடனுக்கு வேலைக்காரன் சொல்லி மறைந்து இருந்த செட்டியாரை மாட்டிவிட்டான்.நமது கிராமங்களில் இதை மருகி வேறு விதமாக கூறுவார்கள்.அது தான் இது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X