கேரளாவில் தீவரமாகும் பருவமழை: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் தீவரமாகும் பருவமழை: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (4)
கேரளா, கனமழை, ரெட் அலெர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு 6 மாவட்டங்களில் இன்று (ஜூலை 17) முதல் 20ம்தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

ஜூலை 18 முதல் 20 வரை இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களிலும், ஜூலை 19 ல் வயநாடு, கண்ணூர் மாவட்டங்களிலும், ஜூலை 20 ல் எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 24 மணி நேரத்தில் 240 மி.மீ., மழை பதிவாகலாம். நிலச்சரிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை 17 இடுக்கி மாவட்டம், ஜூலை 18 ல் கோட்டயம், ஜூலை 19 ல் எர்ணாகுளம், ஜூலை 19, 20 ல் பாலக்காடு, ஜூலை 20ல் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம் அங்கு 115 மி.மீ., முதல் 204.5 மி.மீ., வரை மழை பதிவாகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.







மஞ்சள் நிற எச்சரிக்கை



இந்திய வானிலை மையம், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில்,

ஜூலை 16 : இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர்
ஜூலை 17: கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு கண்ணூர்
ஜூலை 18: திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு
ஜூலை 19: திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம் திரிச்சூர், கோழிக்கோடு, காசர்கோடு
ஜூலை 20: திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.






இதனை தொடர்ந்து, அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறைகளை திறக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு வாய்ப்பு உள்ளதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X