சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (23)
Advertisement

புதுடில்லி : அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா குறித்து முடிவு எடுக்க கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ராஜினாமா கடிதம் அளித்த அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் 15 பேர், தங்களின் ராஜினாமா மீது உடனடியாக முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் இன்று (ஜூலை 17) தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், எம்எல்ஏ.,க்களை விட சபாநாயகர் தான் முக்கியம். ராஜினாமா குறித்து முடிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா மீது சபாநாயகரே முடிவு எடுக்கலாம். ராஜினாமா குறித்து முடிவு செய்ய சபாநாயகருக்கு அவகாசம் அளிக்க வேண்டும். நாளை (ஜூலை 18) நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க எம்எல்ஏ.,க்களுக்கு உத்தரவிட முடியாது. விருப்பப்பட்டால் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 30 நொடிகளில் தீர்ப்பு வாசிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் நாளை காலை 11 மணிக்கு முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூலை-201916:43:12 IST Report Abuse
Endrum Indian வானளாவிய அதிகாரம் படைத்தவர் சபாநாயகர் - அந்தக்காலத்து சபாநாயகர் பி.எச். பாண்டியன் சொன்னது. பாராளுமன்றம், அநீதித்துறை, சட்டமன்றம், பொய் ஒன்றே பரப்பும் பத்திரிக்கை துறை . 1) Indian democracy is said to rest on the venerable four pillars of the legislature, the utive, the judiciary, and the press. All the four pillars have cracked to a great degree and Indian democracy is not healthy. In brief, we have: A legislature epitomized by a non-functioning Parliament. 2) Seven main pillars of the architecture of democracy: elections, political tolerance, the rule of law, freedom of expression, accountability and transparency, decentralization, and civil society. In today's scenario one finds oneself but in a thoroughly disappointing environment as regards constituents of the Legislature and the utive. Simultaneously with the allegations of 'Paid News' the role of Media too has been under the Cloud. Judiciary is following the same path.
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
17-ஜூலை-201917:21:37 IST Report Abuse
தாண்டவக்கோன்என்று..., நீயி சொல்ற நான்கு தூண்களைyum & Seven main pillars of the architecture of democracy: elections, political tolerance, the rule of law, freedom of expression, accountability and transparency, decentralization, and civil society உண்டு இல்லன்னு செதச்சு புட்டானுவளே....
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
17-ஜூலை-201915:22:30 IST Report Abuse
vbs manian சபா நாயகர் அதிகாரம் குறித்த உச்ச நீதி மன்ற கருத்துக்கள் கழகத்துக்கு வயிற்றில் புளியை கரைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
17-ஜூலை-201915:03:04 IST Report Abuse
blocked user இத... இதத்தானே எதிர்பார்த்தேன்... சட்டம் இயற்றும் ஒரு அமைப்பின் நடுநிலையாளரை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. சட்டசபையின் உரிமையில் தலையிடுகிறார் ஆகவே அவரை பதவியை விட்டு தூக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டு அந்தத்தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு விண்ணப்பிக்க முடியும்... மக்களின் பிரதிநிதியான சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
17-ஜூலை-201917:03:54 IST Report Abuse
Pannadai Pandianஇதனை பால் பாண்டியன் அன்றே அண்ணல் எம்ஜிஆர் காலத்தில் நிரூபித்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர்களை காலி செய்த அன்று நான் பாயசம் சாப்பிட்டேன்….....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X