பொது செய்தி

இந்தியா

குறைந்த எரிபொருளுடன் தரையிறங்கிய விமானம்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (4)
Advertisement

லக்னோ: ஒரு மணி நேரத்திற்கு கூடுதல் எரிபொருளை வைத்திருக்க வேண்டிய நிலையில், கூடுதலாக 10 நிமிடத்திற்கு மட்டுமே எரிபொருளுடன் விஸ்தரா விமானம் தரையிறங்கியது.

153 பயணிகளுடன் விஸ்தாரா என்ற தனியார் விமானம் ஒன்று, மும்பையில் இருந்து டில்லிக்கு கிளம்பி சென்றது. டில்லியில் மோசமான வானிலை காரணமாக, அந்த விமானம் லக்னோவில் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது. அங்கும் இறங்க வானிலை இடம் கொடுக்கவில்லை. எனவே அருகில் பிரயாக்ராஜ் அல்லது கான்பூருக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர்.

விமானத்தில் குறைவான எரிபொருள் மட்டுமே உள்ளது என விமானி, ஏடிசியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து லக்னோவிலேயே இறங்குவதற்கு விஸ்தாரா விமானத்திற்கான டிராபிக்கை அதிகாரிகள் சரி செய்தனர். தொடர்ந்து லக்னோவில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் சோதனை செய்ததில், 300 கிலோ பெட்ரோல் மட்டுமே இருந்தது.

இதன் மூலம் 10 நிமிடங்கள் மட்டுமே, அந்த விமானத்தால் பறக்க முடியும். மோசமான வானிலை காரணமாக , பக்கத்து விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என நிலை ஏற்பட்டால், பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜூலை-201917:41:23 IST Report Abuse
ஆப்பு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில் நுட்பம் நம்ம கிட்டே இருக்கே... இங்கே வேலை செய்யாதா?
Rate this:
Share this comment
Cancel
17-ஜூலை-201915:49:51 IST Report Abuse
ஆப்பு எரிபொருள் சிக்கனம்... தேவை இக்கனம். ரொம்ப சீரியசா எடுத்துக்கிட்டாங்க...
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
17-ஜூலை-201915:24:36 IST Report Abuse
Raghuraman Narayanan TATA நிறுவன விமான நிறுவனம் இப்படி செய்வதா? மக்களின் நக்கபிக்கையை TATA நிறுவனம் இழக்க மாட்டார்களா இந்த நிகழ்ச்சியால்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X