கோர்ட் தீர்ப்பு: கர்நாடக தலைவர்கள் ஏற்பு

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (11)
Advertisement

பெங்களூரு: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனை கர்நாடக சபாநாயகரும், காங்., கட்சியும் வரவேற்றுள்ளனர்.






அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் 15 பேர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று (ஜூலை 17) தீர்ப்பு வழங்கியது. இதில், சபாநாயகருக்கு தாங்கள் உத்தரவிட முடியாது. ராஜினாமாவை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ சபாநாயகருக்கு காலகெடு விதிக்க முடியாது. நாளை நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களை கட்டாயப்படுத்த முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.






தீர்ப்பு பற்றி கர்நாடக தலைவர்கள் கருத்து :



சபாநாயகர் ரமேஷ்குமார்: வரவேற்கத்தக்க வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா விவகாரத்தில் அரசியலமைப்பை மீறி முடிவெடுக்க மாட்டேன். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் எனது பொறுப்பு அதிகரித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் நம்பிக்கையை காப்பாற்ற நான் முயற்சிப்பேன் என்றார்.





கர்நாடக காங்., : ஆபரேஷன் கமலா (தாமரை) தோல்வியடைந்துள்ளது என கர்நாடக காங்., தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளது.

பா.ஜ., எடியூரப்பா : சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு கிடைத்துள்ள நியாயமான வெற்றி. இது இடைக்கால உத்தரவு மட்டுமே. சபாநாயகரின் அதிகாரங்கள் குறித்து எதிர்காலத்தில் சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும். கர்நாடக முதல்வர் தன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார். நாளை நம்பிக்கை கிடைக்காவிட்டால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.





இதற்கிடையில் தீர்ப்பு வெளியான சமயத்தில் சிருங்கேரியில் உள்ள சங்கரமடத்திற்கு சென்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி, சாமி தரிசனம் செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
17-ஜூலை-201916:14:07 IST Report Abuse
 N.Purushothaman குதிரை பேரம் நடத்த நல்லா அவகாசம் கொடுத்தது தான் மிச்சம்
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
17-ஜூலை-201915:16:14 IST Report Abuse
C.Elumalai பாவம்,விஞ்ஞான வாரிசு,அடுத்தகட்சி 11,எமஎல்ஏ க்களைதகுதி,நீக்க சபாநாயக ருக்கு உத்திரவிடகோரி வழக்கு, இதைகாட்டி,தன் பரம்பரை, கொத்தடிமைகளுக்கு ஷோ கட்டி கொண்டிருந்தார்,சுடலையாண்டி. கர்நாடக வழக்கு தீர்ப்பு,துண்டுசீட்டின் கனவுகளுக்கு ஆழமாக ஆப்பு அடிச்சிருக்காங்க,நீதியரசர்கள்.
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
17-ஜூலை-201914:36:33 IST Report Abuse
natarajan s இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் நமது ஸ்டாலின் 11 பேர் மீது போட்ட defying whip வழக்கு அமையும். உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வழி மொழிந்து சபாநாயகரின் அதிகாரத்திற்குள் நீதிமன்றம் தலையிடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துவிடும் . பாவம் திரு ஸ்டாலின் . ஆனாலும் நமது அரசியல் இவளவு தரம் தாழ்ந்து போகக்கூடாது . இவர்களுக்குள் நடக்கும் பண பாகப்பிரிவினையில் மாட்டிக்கொண்டு தவிப்பது மக்கள்தான் . அரசு இயந்திரம் இவளவு நாளாக செயல்படவில்லை இந்த கூத்தில் . ஒருவழியாக திரு சித்தராமையா தான் நினைத்தததை சாதித்து கொண்டார் அதிருப்தி MLA களை வைத்து .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X