அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛நீட்' கூட்டம்: இபிஎஸ் காட்டம்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (37)
Advertisement
NEET exam,medical entrance test,நீட், முதல்வர் இ.பி.எஸ்.,  சட்டசபை, சண்முகம், திமுக, ஸ்டாலின்

சென்னை: நீட் தேர்வில் விலக்கு குறித்து, சிறப்பு சட்டசபை கூட்டத்தை விவாதிக்க தயாராக உள்ளதாக முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விலக்கு கோரும், இரண்டு சட்ட மசோதாக்கள், தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.விளக்கம்


இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் விளக்கம் அளித்து சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அளித்த விளக்கம்: நீட் விலக்கு மசோதாக்கள் குறித்து எந்த தகவலையும் மறைக்கவில்லை. இந்த மசோதா குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.இது வரை 12 கடிதங்கள் எழுதியுள்ளோம்.
இதற்கு மத்திய அரசிடம் இருந்து முறையான பதிலும் வரவில்லை. நீட் விலக்கு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை. நீட் மசோதா நிராகரிக்கப்பட்டதாக ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது. கடைசியாக ஒரு முறை விளக்கம் கேட்டு சட்ட ரீதியாக அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.கேள்வி


திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ஜனாதிபதி ஒரு மசோதாவை வித் ஹெல்ட் என குறிப்பிட்டால், நிராகரிப்பு என்று தான் அர்த்தம். நீட் விலக்கு மசோதாவிலும் வித் ஹெல்ட் என்று தான் குறிப்பிட்டுள்ளார். சட்டசபையில் நீட் விலக்கு குறித்து புது மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்படுமா? இரண்டு ஆண்டுகளாக, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் சொல்லாத மத்திய அரசு, இதே நிலை தொடர்ந்தால் என்ன செய்வது எனக்கேள்வி எழுப்பினார்.அழுத்தம்


இதன் பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., பேசும் போது: நீட் தேர்வில் விலக்கு கேட்ட மசோதாவை நிராகரித்ததற்கான காரணம் தெரியவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என ஒருமித்த கருத்துடன் உள்ளோம். இந்த விவகாரத்தில் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட அரசு தயாராக உள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு முறையும் திருப்பி அனுப்பி கொண்டிருந்தால் என்ன செய்வது? மத்திய அரசிடம் விளக்கம் கேட்ட பின்னர் சிறப்பு தொடரை கூட்டுவது குறித்து முடிவு செய்யப்படும். பிரதமரை ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போது, நீட் தேர்வில் விலக்கு அளிக்க அழுத்தம் கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21-ஜூலை-201908:14:47 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழ்நாட்டுலே தான் நெறைய மெடிக்கல் காலின்=ஜூங்க தனியாருக்கு (அதிமுக அண்ட் திமுக பினாமிகளால் )நடத்தப்படுத்து பல ஏழைமாணவர்கள் மெடிக்கல் கனவுகளே நாசமாரது இந்த கோடீஸ்வரனுகளால் என்பது உண்மை கல்வியே வியாபாரமாக்கினவனுகளே தான் இந்த ரெண்டு கழகம்களும் என்பது தெள்ள தெளிவு . ஐயோ வதைப்போச்சேன்னு அலறுதுங்க இந்த ரெண்டும் என்பதும் 100%உண்மை நீட் மூலம் நன்னபடிச்ச படிக்கும் ஆர்வம் உள்ள மாணவர்களை அரசுமேடிகள் காலேஜுக்கு போகமுடியாது , ஆனால் படிப்பே ஏறாத ரௌடிகளா தெரியும் பல பணக்காரவீட்டுப்பசங்களே கௌரவமான பட்டம் வாங்கிட்டு நெறைய வரதக்ஷிணைவாங்கிண்டு போகவேதான் டாக்டருக்கே படிக்குதுங்க , பல டாக்டர்ஸ் வெறும் பொம்மைகளேதான் தனித்தனிபார்ட்ஸுக்கு ஸ்பெஷலிஸ்ட ஆயிட்டுப்போர்ட்டும் போட்டுண்டு காசும் சேர்க்கிறானுக , பேஷண்ட்களிடமும் கேவலமா நடக்கும் பொறுக்கிகளாவும் பல டாக்டருங்க இருக்காங்களே எங்கே முட்டிண்டு அழறது . போயில்லீங்க உண்மையைத்தான் கூறுகிறேன் , அபபடிவருமானம் போவுதுன்னுதான் நீட் வேண்டாம்னு கதறுதுங்க இந்த கழகம் இரண்டும் கூடவே இவைகளின் ஜாலராக்களும் துணை
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
17-ஜூலை-201922:46:41 IST Report Abuse
Rafi நீட் இல்லாமல் உலக தரம் வாய்ந்த மருத்துவர்களை தமிழகம் தந்துள்ளது. நீட்டில் கோச்சிங்கில் செய்வதற்க்கே இரண்டு லட்சம் தேவை பட்டால் சாமானிய மக்கள் அதில் சேர்வதை தடுக்க முடியும், என்று திட்டமிட்டு கொண்டு வந்துள்ளார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
17-ஜூலை-201920:33:21 IST Report Abuse
Ram இதெல்லாம் தேவையில்லாத வேலை, எத்தனையோ பிரச்னை இருக்கு அதை போய் கவனிங்க ஸ்டாலின்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X