‛நீட் கூட்டம்: இபிஎஸ் காட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛நீட்' கூட்டம்: இபிஎஸ் காட்டம்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (37)
NEET exam,medical entrance test,நீட், முதல்வர் இ.பி.எஸ்.,  சட்டசபை, சண்முகம், திமுக, ஸ்டாலின்

சென்னை: நீட் தேர்வில் விலக்கு குறித்து, சிறப்பு சட்டசபை கூட்டத்தை விவாதிக்க தயாராக உள்ளதாக முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விலக்கு கோரும், இரண்டு சட்ட மசோதாக்கள், தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.







விளக்கம்


இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் விளக்கம் அளித்து சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அளித்த விளக்கம்: நீட் விலக்கு மசோதாக்கள் குறித்து எந்த தகவலையும் மறைக்கவில்லை. இந்த மசோதா குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.இது வரை 12 கடிதங்கள் எழுதியுள்ளோம்.
இதற்கு மத்திய அரசிடம் இருந்து முறையான பதிலும் வரவில்லை. நீட் விலக்கு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை. நீட் மசோதா நிராகரிக்கப்பட்டதாக ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது. கடைசியாக ஒரு முறை விளக்கம் கேட்டு சட்ட ரீதியாக அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.







கேள்வி


திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ஜனாதிபதி ஒரு மசோதாவை வித் ஹெல்ட் என குறிப்பிட்டால், நிராகரிப்பு என்று தான் அர்த்தம். நீட் விலக்கு மசோதாவிலும் வித் ஹெல்ட் என்று தான் குறிப்பிட்டுள்ளார். சட்டசபையில் நீட் விலக்கு குறித்து புது மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்படுமா? இரண்டு ஆண்டுகளாக, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் சொல்லாத மத்திய அரசு, இதே நிலை தொடர்ந்தால் என்ன செய்வது எனக்கேள்வி எழுப்பினார்.







அழுத்தம்


இதன் பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., பேசும் போது: நீட் தேர்வில் விலக்கு கேட்ட மசோதாவை நிராகரித்ததற்கான காரணம் தெரியவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என ஒருமித்த கருத்துடன் உள்ளோம். இந்த விவகாரத்தில் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட அரசு தயாராக உள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு முறையும் திருப்பி அனுப்பி கொண்டிருந்தால் என்ன செய்வது? மத்திய அரசிடம் விளக்கம் கேட்ட பின்னர் சிறப்பு தொடரை கூட்டுவது குறித்து முடிவு செய்யப்படும். பிரதமரை ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போது, நீட் தேர்வில் விலக்கு அளிக்க அழுத்தம் கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X