பிரியங்கா மீது பிரியம்: தலைவராக்க தெரியும்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (30)
Advertisement

புதுடில்லி: ராகுல் ராஜினாமா செய்து விட்டதால் காங்., கட்சியின் புதிய தலைவராக பொதுச்செயலாளர் பிரியங்காவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்துள்ளது.





ராகுல் ராஜினாமா முடிவை அறிவித்ததும், பிரியங்காவை அடுத்த தலைவர் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் கட்சி தலைவர்கள் பலருக்கும் எழுந்துள்ளது. ஆனால், மே 25 ம் தேதி நடந்த காங்., காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல், தங்கள் குடும்பத்தை சேராத ஒருவர் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என கூறியதால், அனைவரும் அமைதியாக இருந்து விட்டனர்.

தற்போது பலரும் பிரியங்கா தான் அடுத்த தலைவர் ஆக வேண்டும் என வெளிப்படையாக பேச துவங்கி உள்ளனர். அவர் சோனியா குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், நல்ல தலைவர், தலைவராக தகுதி உடையவர். ஆற்றல் மிக்கவர் என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார். முன்னாள் எம்.பி., பக்த சரண் தாஸ் கூறுகையில், கட்சியில் அடிமட்ட தொண்டர் முதல் மேல்மட்ட தலைவர்கள் வரை ராகுல் இல்லாவிட்டால் பிரியங்கா தான் தலைவராக வேண்டும் என விரும்புகிறார்கள் என்றார்.





ராகுல் தனது ராஜினாமாவை திரும்பப் பெறவில்லை என்றால் இனியும் தாமதிக்காமல், புதிய தலைவராக பிரியங்காவை நியமிக்க முன்மொழியவும் முக்கிய தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இருந்தும், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ராகுலை சமாதானப்படுத்த முக்கிய தலைவர்கள் பலர் முயற்சித்த போது பேசிய பிரியங்கா, கட்சியை கொலை செய்த பலரும் இங்கு உள்ளதாக கூறியது சிலரின் மனதில் நெருடலை ஏற்படுத்தியது. பிரியங்காவிற்கு கட்சி பற்றி ஒன்றும் தெரியாது, அவர் காங்.,கில் குழந்தை என பலரும் கருத்து கூற துவங்கி விட்டனர்.





இந்த வாரம் நடைபெற உள்ள காங்., காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுலின் ராஜினாமாவை ஏற்பதா என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. ராஜினாமா முடிவில் ராகுல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், இடைக்கால தேர்தல் நடத்தி ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும். அதே சமயம் அந்த இடைப்பட்ட காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் கூடி புதிய தலைவரை தேர்வு செய்வார்கள்.





புதிதாக தேர்வு செய்யப்படும் தலைவர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு தொண்டர் மற்றும் வாக்காளரின் மனதிலும் நம்பிக்கை ஏற்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். வயது ஒரு முக்கிய பிரச்னை என்பதால், வயது மற்றும் செல்வாக்கு ஆகிய இரண்டையும் வைத்து தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
மிகவும் வயதானவர் கட்சியின் அடுது்த தலைவராக கூடாது. அவர் ராகுலை போன்று கடினமாக உழைப்பவராக இருக்க வேண்டும். ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் கட்சிக்காக உழைப்பவர்களாக இருந்தாலும் பிரியங்காவை போல் அனைவருக்கும் தெரிந்தவராக இல்லை என கட்சி தலைவர்கள் கருதுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஜூலை-201918:14:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni மன்மோகன் நோ பசிதம்பரம் நோ சோனியா நோ பிரியங்கா நோ
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஜூலை-201913:03:35 IST Report Abuse
skv srinivasankrishnaveni இப்போதே காங்கிரேஷ்கட்சி ஐஸீ யு லே இருக்கும் கிரிட்டிகள் பேஷண்டா இருக்கு, காங்கிரஸ் என்ன நேரு வீட்டுக்கே சொந்தமான கச்சி யுமில்லே வெங்காயம் சோனியாவை தலைவியாக்கினது மாபெரும் தப்பு
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
18-ஜூலை-201901:58:38 IST Report Abuse
Ram Sekar காங்கிரஸ் அடிமைகளே பெட்ரோமாஸ் லைட் தான் வேணுமின்னா எப்படி? அதுவும் பீஸ் போன பெட்ரோமாஸ் பல்புதான் வேணும்ன்னு ஏன்யா அலையுறீங்க இப்படி?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X