நம்பிக்கை ஓட்டெடுப்பு: அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ‛விடுப்பு| Dinamalar

நம்பிக்கை ஓட்டெடுப்பு: அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ‛விடுப்பு'

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (21)
Share

மும்பை : கர்நாடக சட்டசபையில் நாளை (ஜூலை 18) நடக்க இருக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க போவதில்லை என அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news


ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் 15 பேர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று (ஜூலை 17) தீர்ப்பு வழங்கியது.
சபாநாயகருக்கு உத்தரவிட மறுத்த சுப்ரீம் கோர்ட், ராஜினாமா குறித்து முடிவு செய்யும் அதிகாரம் சபாநாயருக்கே உள்ளது என தீர்ப்பு கூறியது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்பது அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் விருப்பம் எனவும் குறிப்பிட்டிருந்தது.


latest tamil news



இதையடுத்து மும்பையில் தங்கி உள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களிடம், நாளை நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்பீர்களா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்கள், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிப்பிக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எங்களின் முடிவில் நாங்கள் திடமாக உள்ளோம். சட்டசபைக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கே இடமில்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்தனர்.

அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து கூற முதல்வர் குமாரசாமி மறுத்து விட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X