போன்களுக்கு பிரியாவிடை: பெண்களுக்கு தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

போன்களுக்கு பிரியாவிடை: பெண்களுக்கு தடை

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (35)

ஆமதாபாத் : குஜராத்தில் 12 கிராமங்களில் தாக்கூர் சமூகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத இளம்பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி காங்., எம்எல்ஏ.,வும் ஆதரவு தெரிவித்துள்ளார்.





ஜூலை 14 ம் தேதி ஒன்று கூடி ஆலோசனை நடத்திய தாக்கூர் சமூகத்தை சேர்ந்த சுமார் 800 தலைவர்கள், 9 தீர்மானங்களை நிறைவேற்றினர். இதன்படி, தாக்கூர் சமூகத்தை சேர்ந்தவர்கள், மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்யக் கூடாது. தாக்கூர் சமூகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.




பனஸ்கந்தா மாவட்டத்தில் தந்தேவாடா தாலுக்காவிற்கு உட்பட்ட 12 கிராமங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறி மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தாக்கூர் சமூக பெண்கள், மற்ற சமூக ஆண்களை காதலித்தாலோ, திருமணம் செய்து கொண்டாலோ அவரின் குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சம் அபராதமும், தாக்கூர் சமூகத்தை சேர்ந்த ஆண்கள் மற்ற சமூக பெண்களை காதலித்து, திருமணம் செய்து கொண்டால் ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




திருமணம் ஆகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவது தெரிய வந்தால் அவரின் பெற்றோர்களே காரணம் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு வாவ் தொகுதி காங்., பெண் எம்எல்ஏஜெனிபன் நாகாஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், இது போன்ற கட்டுப்பாடுகள் விதித்தால் தான் சமீப காலமாக அதிகரித்து வரும் சாதி மறுப்பு திருமணங்களை நிறுத்த முடியும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 20 ஜோடிகள் இந்த விவாகாரத்தால் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இளம்பெண்களுக்கு இது போன்ற கட்டுப்பாடு விதித்தால் ஆண்கள் தானாக அடங்குவர். பெண்கள் பெற்றோர்களுடன் வசிப்பதால் அவர்களை கட்டுப்படுத்துவது எளிது. அதனால் இளம்பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை சரியானது தான் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X