பாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (15+ 8)
Advertisement
JuD, Hafiz Saeed, arrest, பாகிஸ்தான், பயங்கரவாதி, ஹபீஸ் சயீது,

லாகூர்: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


கண்காணிப்பு


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீது மீது பாகிஸ்தானில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளின் நெருக்கடியைத் தொடர்ந்து ஹபீஸ் சயீது தலைவராக உள்ள லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா, பலாஹே இன்சானியாத் அறக்கட்டளை ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்து பாக். அரசு கண்காணித்து வருகிறது. ஜமாத் உத் தாவா அமைப்பின் சார்பில் பாகிஸ்தானில் 300க்கும் மேற்பட்ட மதப்பள்ளிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் சேவை நடத்தப்படுகின்றன.







முன்ஜாமின்


இந்த மதப்பள்ளிக்காக தரப்பட்ட நிலத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக ஹபீஸ் சயீது மற்றும் அவருக்கு நெருக்கமான மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹபீஸ் சயீதுக்கு ஆகஸ்ட் 31 வரை முன்ஜாமின் வழங்கப்பட்டிருந்தது. பயங்கரவாதத்துக்கு பண உதவி மற்றும் பண மோசடி வழக்குகளை எதிர்த்து ஹபீஸ் சயீது சார்பில் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.


நீதிமன்ற காவல்


இந்நிலையில், லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா என்ற இடம் நோக்கி சென்று கொண்டிருந்த பயங்கரவாதி ஹபஸ் சயீது கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதற்காக கைது செய்யப்பட்டார் என தகவல் இல்லை. கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (15+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜூலை-201920:29:09 IST Report Abuse
தமிழ்வேல் பயங்கரவாதியின் கைதிற்கு காரணம் வேறு வேண்டுமா ? மற்றபடிசெய்தியில் அவனை ஒருமையிலேயே எழுதலாமே...
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201917:27:05 IST Report Abuse
Yaro Oruvan அடிக்கிற வெயில்ல இவனுவ வேற நடுவுல நடுவுல காமெடி செஞ்சி கடுப்பேத்துறானுவ.. அவன பாத்தா ஜெலியிலுக்கு போற மாதிரியா இருக்கான்.. தின்னு கொழுத்த ப்ராய்லர் கோழி மாதி இருக்கான்.. அவன ஒன்னும் செய்ய முடியாது.. முட்ட கும்பல் செய்யவும் வுடமாட்டானுவ.. நம்பி நம்பி மொத்தமா கும்பலா நாசமாப்போறது அவனுகளுக்கு புடிக்கும். விட்டுத்தொலைங்க...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூலை-201916:28:25 IST Report Abuse
Endrum Indian பாகிஸ்தான் என்ன உதார் விட்டது ஹபீஸ் சையத் இங்கு இல்லை தாவூத் இங்கு இல்லை??1) எங்கேயிருந்தான் இவன் , இவனை எங்கு எப்படி கைது செய்தீர்கள். 2) இந்தியாவின் சட்டம் போல விசாரணை, ஜாமீன், தள்ளிவைப்பு, தள்ளுபடி நடக்குமா???இல்லை முஸ்லீம் அரேபிய முறைப்படி தங்க வாளால் தலை துண்டிக்கப்படுமா??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X