எப்போது ஏவப்படும் சந்திரயான் 2?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எப்போது ஏவப்படும் சந்திரயான் 2?

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (7)

பெங்களூரு : நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்ப உள்ள சந்திரயான் 2, ஜூலை 21 பிற்பகல் அல்லது ஜூலை 22 அன்று அதிகாலை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.1000 கோடி மதிப்பில் சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜூலை 15 அன்று அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.





சந்திரயான் 2 ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஜூலை 21 அன்று சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் ஜூலை 22 அன்று, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்ததாகவும், மாற்றம் செய்யப்பட்ட விண்கலங்கள் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்திலேயே ஏவப்பட்டுள்ளதால், ஜூன் 21 அன்று விண்ணில் ஏவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இன்று (ஜூலை 17) மாலை இஸ்ரோவின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் தேதி மற்றும் நேரம் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X