சட்ட விரோத குடியேற்றம்: கட்டாயம் வெளியேற்றம்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (19)
Advertisement

புதுடில்லி : இந்தியா முழுவதிலும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமித்ஷா, சரியான குடிமக்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம். எனவே ஜூலை 31 ம் தேதி வரை அவகாசம் என சுப்ரீம் கோர்ட்டில் கேட்டுள்ளோம். சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் மற்றும் ஊடுருவியர்கள் அனைவரையும் அடையாளம் கண்டுபிடித்து, சர்வதேச குடியுரிமை சட்டத்தின்படி நாடு கடத்துவோம். பா.ஜ.,வின் தேர்தல் வாக்குறுதியில் இதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என சில பெயர்கள் தேசிய குடியுரிமை பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சில பெயர்கள் தவறாக சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசுக்கு 25 லட்சம் கோரிக்கைகள் வந்துள்ளன. இறுதி என்ஆர்சி பட்டியலில் எந்த தவறும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
18-ஜூலை-201908:49:39 IST Report Abuse
Pannadai Pandian இந்த தலைப்புக்கு சம்பந்தமான ஒரு சுவாரசியமான நிகழ்வு என் ஆசிரியர் வாழ்விலும் நடந்தது. நான் அருணாச்சல பிரதேசத்தில் படித்து முடித்த பின் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் ஆசிரியராக அரசு பணியில் அமர்ந்தேன். அரசின் நேர்முக, எழுத்து தேர்வில் முதல் இடம் பெற்றேன். என்னை தேஜு என்ற இடத்தில் பணியமர்த்தினர். மிக இளைய வயது, அனுபவம் சுத்தமாக கிடையாது. இத்தனைக்கும் முதுகலை பட்டத்தில் கிரேடு ஓ வாங்கியிருந்தேன். ஒரு ஆசிரியருக்கான அடிப்படை தகுதியான - விஷயத்தை கோர்வையாக, அழகாக, புரியும்படி சொல்லும் தகுதி என்னிடம் இல்லாமல் போனது. ஒவ்வொரு நாளும் நான் வகுப்பில் டக் அவுட் தான். 94 பேர் உள்ள வகுப்பில் மாணவர் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது. சக ஆசிரியர்கள், ஒரு ஜாட் ஆசிரியரை தவிர, எல்லோரும் என்னை ஏளனமாக பார்த்தார்கள். ஆனால் மாணவர்கள் என்னை என்றும் தரக்குறைவாக எண்ணியதில்லை. வயதில் இளையவர், விஷயம் தெரியும் ஆனால் அனுபவம் இல்லை என்று என்னை நோக்கினார். அப்போது ஒரு மாணவன் ஹுசைன் என்று பெயர். மூன்று வருடம் தேர்வில் பாஸ் ஆகாத மாணவன். வங்க தேசத்தில் இருந்து அவர் பெற்றோர்கள் கள்ளத்தனமாக குடியேறியவர்கள். ஒரு நாள் வகுப்புகள் முடிந்து எல்லோரும் சென்று விட்ட பிறகு தனியாக ஆசிரியர் ரூமில் அமர்ந்திருந்தேன்… அப்போது இந்த ஹுசைன் என்ற மாணவன் வந்தான்… சார்…..நான் இன்னிக்கு உங்க வீட்டுக்கு வர்றேன்…கொஞ்சம் காத்திருங்கள் என்றான். நானும் சரி என்று காத்திருந்தேன். வந்தவுடன் ஒரு காப்பி போட்டு கொடுத்தேன்… அவன் நன்கு முதிர்ச்சி அடைந்த மாணவன். என்னை நன்கு கணித்திருந்தான். சார் உங்களுக்கு எல்லாமே தெரியும்… உங்கள் அறிவு சூப்பர். அனுபவம் தான் இல்லை என்று கூறி இதற்கு முன் இருந்த ஆசிரியர் டத்தா இந்த புத்தகத்தை தான் படிப்பார், நீங்களும் அதனை ஒரு முறை படித்து பாருங்கள் என்று அந்த புத்தகத்தை தந்தான். ஒரு நிமிடம் புத்தகத்தை புரட்டி பார்த்தேன்… ஆகா… இது தெரியாமல் நாம் இத்தனை நாள் தவித்தோமே என்று ஆதங்கப்பட்டு கொண்டேன்.. உடனே அந்த மாணவனை இனி தினம் என் வீட்டுக்கு வா, நான் சொல்லி தருகிறேன் என்று கூப்பிட்டேன்… முதலில் அவனுக்கு புரியும்படி டியூஷன்… மறு நாள் வகுப்பில் பாடம்… இப்படித்தான் காலம் சென்றது.அந்த மாணவனின் சிறு உதவியால் நான் மிக பெரிய நல்லாசிரியராக பெயர் பெற்றேன். இந்தாண்டு அவனையும் நல்ல மதிப்பெண்ணில் பாஸ் செய்ய வைத்தேன். தொடர்ந்து மூன்று வருடங்கள் என்னை பொருளாதாரம்-புள்ளியில் பாடத்துக்கு அருணாச்சல பிரதேச அரசு கேள்வி தான் தயார் செய்ய கேட்டுக்கொண்டது… நான் ஆசிரியராக பணியாற்றிய போது என் கண் முன் எல்லோரும் மாணவர்களாகத்தான் தெரிந்தார்கள் தவிர வங்கதேசிகள், அஸ்ஸாமிகள், லோக்கல் மாணவர்கள், பீஹாரிகள், பஞ்சாபிகள் என்று தெரிந்ததில்லை. சகட்டு மேனிக்கு நான் எல்லோரையும் நேசித்தேன். நான் திருமணம் ஆகாதவன் என்று தெரிந்து பல மாணவிகள் என்னை காதலித்தனர்…… அதனை நான் நாசூக்காக அவர்கள் மனம் கோணாமல் தவிர்த்தேன்… நான் தேஜூவில் இருந்தவரை நான் தான் ஹீரோ.. என் பெயரை வைத்து நோக்குள் சாய் என்பவர் சட்ட மற்ற உறுப்பினர் ஆனார் என்பதும் வேறு கதை……..
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
18-ஜூலை-201907:53:01 IST Report Abuse
Pannadai Pandian இந்த களையெடுப்பு ரொம்ப அவசியம். அஸ்ஸாமில் வங்கதேசிகள் ஏராளமாக குடியேறி பிரம்மபுத்ரா வடகரை, சில்சார், துலியாஜான், டிக்பாய் போன்ற பல இடங்களை ஆக்கிரமித்துள்ளார்கள். இவர்கள் இன்னர் லைன் பெர்மிட் (Inner Line Permit) உள்ள அருணாச்சலில் கூட குடியேறிவிட்டார்கள். அங்கு பல பங்களா பஸ்திகள் உருவாகியுள்ளன. இவர்கள் தேச நலனுக்கு மிக பெரிய அச்சுறுத்தல். தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் தங்களுக்காக அரசியல் கட்சிகள், மத சம்பந்தமான அமைப்புகளை உருவாக்கி நாட்டின் இறையாண்மைக்கு சவாலாக உள்ளனர். 1970களில் இவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மாணவர் சமுதாயம் காங்கிரஸ் கட்சியால் அடக்கப்பட்டது… அதன் காரணமாக பல முறை கோகாய் முக்கிய மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வங்க தேச முஸ்லிம்களின் கள்ள குடியேற்றமும் தொடர்ந்தது. தற்போது பாஜக கால் ஊன்றியதால் வங்க தேச கள்ள குடியேறிகளை வெளியேற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன, அதனை மக்கள் வரவேற்க வேண்டும். மேற்கு வங்கத்திலும் இதே நிலைமை தான். அங்கு சுதந்திரம் அடைந்த போது எல்லா முஸ்லிம்களும் கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர். பின்பு அங்கு நிலவும் வறுமை காரணமாக, சரியான இந்தியா பாகிஸ்தான் போன்ற தடுப்பு இல்லாததால் வங்கதேசிகள் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள்,திருமுனால் காங்கிரஸ் உதவியுடன் கள்ளத்தனமாக குடியேறியுள்ளனர். மேற்கு வங்கத்தின் ஜனத்தொகையில் 30 % மக்கள் இந்த கள்ளத்தனமாக குடியேறிய வங்கதேசிகள். இவர்களை கண்டறிந்து வெளியேற்ற வேண்டும். மேற்கு வங்கத்துக்கும் வங்கதேசத்துக்கு வலுமையான பஞ்சாபி-பாகிஸ்தான்-காஷ்மீர் எல்லை கோட்டில் அமைந்துள்ள வேலி போல அமைத்து பார்டர் செக்கூரிட்டி போர்ஸ் மூலம் எல்லையை பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் கால்நடைகள், நிலக்கரி போன்றவை தாராளமாக வங்கதேசத்துக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். இது கடினமான காரியம்…. இன்டர்நேஷனல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் அதற்கு மேலாக முஸ்லீம் வாக்கு வங்கியால் பயனடைந்த இந்திய துரோகிகள் கடுமையாக எதிர்ப்பார்கள். மோடி அரசு திடகாத்திரமான அரசு. எல்லா சவால்களையும் எதிர்கொண்டு இந்த மசோதாவை நிறைவேற்றும்.
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
18-ஜூலை-201906:12:00 IST Report Abuse
rmr நைஜீரியர்கள் பலர் தமிழகத்தில் வந்து வாழ்ந்து வருகின்றனர் , சட்டவிரோதமாக
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
18-ஜூலை-201908:51:56 IST Report Abuse
Pannadai Pandianஅவுங்களாக நமக்கு ஒரு தொல்லையும் இல்லை….இருந்துட்டு போகட்டும்….....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
18-ஜூலை-201908:53:08 IST Report Abuse
Pannadai Pandianநம்ம ஆளுங்களும் நைஜீரியாவில் பலர் சட்ட விரோதமாக உள்ளனர்…..அவர்களை நைஜீரிய அரசு மனித நேயத்துடன் அணுகுகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X