குல்பூஷணை பாக். தூக்கிலிட முடியாது:சர்வதேச கோர்ட் தீர்ப்பு

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (20)
Advertisement
குல்பூஷணை பாக். தூக்கிலிட முடியாது:சர்வதேச கோர்ட் தீர்ப்பு

08 தி ஹேக்: குல்பூஷண் ஜாதவ் வழக்கில், மரண தண்டனையை பாக். ராணுவம் நிறைவேற்ற முடியாது என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு வழங்கியுள்ளது.


இந்திய கடற்படையில் பணியாற்றி, ஓய்வுபெற்ற குல்பூஷண் யாதவ், 49, 2016-ம் ஆண்டு ஈரான் சென்றிருந்த போது, பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம், 2017ல் மரண தண்டனை விதித்தது.




இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் உள்ள, தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில்,
இந்தியா வழக்கு தொடர்ந்தது. 2017- மே மாதம் மரண தண்டனைக்கு தடை விதித்தது.இந்த வழக்கு தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நான்கு நாட்கள், இரு தரப்பு வாதங்களை விசாரித்த




சர்வதேச நீதிமன்றம், ஜூலை 17-ல் தீர்ப்பு வெளியிட முடிவு செய்திருந்தது.தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: குல்பூஷண் ஜாதவை பாக். ராணுவம் தூக்கிலிட முடியாது. அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை பாக். ராணுவம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இந்தியா சார்பில் வழக்கறிஞரை வைத்துக்கொள்ளலாம். உறவினர்களையும் பார்க்கலாம்.இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவின் சட்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. குல்பூஷண் ஜாதவிற்கு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.



குல்பூஷணுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதையடுத்து அவரது சொந்த கிராமத்தில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chails ahamad - doha,கத்தார்
17-ஜூலை-201921:41:01 IST Report Abuse
chails ahamad மனதிற்கு மகிழ்வாய் உள்ளது மனிதாபிமானமாக சகோதரர் குல்பூஷன் ஜாதவ் அவர்களை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் விடுதலை செய்து இந்தியா அனுப்பி வைப்பதே இருநாடுகளுக்கும் இடையில் நல்லிணக்கம் தொடர்ந்திட வழியேற்படுத்திடும் என்பதை உணர வேண்டும் , வாழ்க பாரதம் .
Rate this:
Share this comment
Cancel
ஓரி -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூலை-201921:31:22 IST Report Abuse
ஓரி காங்கிரஸ் இப்போ ஆட்சியில் இருந்தா அவ்ளோதான்!!
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-ஜூலை-201921:01:39 IST Report Abuse
Nallavan Nallavan குலபூஷண் (பாகிஸ்தானின் பிடியில்) இன்னமும் உயிருடன் இருக்கிறாரா என்பதை இந்தியா உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X