பொது செய்தி

இந்தியா

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் மீது 61 வழக்குகள்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 86 ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.






இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறி இருப்பதாவது: கடந்த 2016-17, 2018-19 ஆகிய மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதிலும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் பிரிவுகளில் பதவி வகித்து வந்த 86 அதிகாரிகளின் மீது ஊழல் வழக்குகள் மற்றும் அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு என சி.பி.ஐ., 61 வழக்குகளை பதிவு செய்துள்ளது.




மேலும் 20 சி.பி.ஐ.,வழக்குகளில் 26 அதிகாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் தண்டனை பெற்றுள்ளனர். இரண்டு வழக்குகளில் கோர்ட் உத்தரவின்படி அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எந்த ஒரு அதிகாரியும் வெளிநாட்டிற்கு தப்பி செல்லவில்லை என கூறினார்.


மத்திய விஜிலென்ஸ் கமிஷனால் தவறு செய்வோரின் நடவடிக்கை 2016-ல் 2,018 ஆக இருந்தது 2018-ல் 1,889 ஆக குறைந்துள்ளது. நாட்டில் ஒட்டுமொத்த ஊழல் அதிகரித்துள்ளது என்று சொல்வது தவறானது .


ஊழலுக்கு எதிரான கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மேலும் ஊழலை எதிர்த்து போராட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
18-ஜூலை-201918:41:57 IST Report Abuse
spr பொதுவாக நம் அரசியல்வியாதிகள் பெரும்பாலும் அறிவிலிகள் சட்ட ஞானம் விதிமுறைகளைக் குறித்த அறிவு குறைந்தவர்கள் அல்லது இல்லாதவர்களே அவர்களுக்கு இருப்பதெல்லாம் முரட்டுத்துணிச்சல் மற்றும் பேராசை மட்டுமே குடும்பம் அடித்த கொள்ளை சிலருக்குப் பண வலு சேர்க்கிறது. அவர்களுக்கு வழிமுறைகளை சொல்லிக் கொடுத்து, சட்ட ஓட்டைகளைக் காட்டிக் கொடுப்பது அதிகாரிகளும், சட்ட வல்லுனர்களும் சட்ட வல்லுநர்களுக்கு அது பிழைப்புக்கான வழி என்பதால் அவர்களை மன்னித்துவிடலாம் ஆனால் அதிகாரிகளை மன்னிக்கவே கூடாது என்றாலும் அரசியல்வியாதி அவர் எத்தனைதான் நேர்மையில் காணாராஜரைப் போல சாஸ்திரியைப் போல என்றாலும், இந்த அதிகாரிகளை பகைத்துக் கொண்டால் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் எனவே கண்டு கொள்வதில்லை கால ஓட்டத்தில் அவர்களுக்கு அடிமையாகவே ஆகிவிடுகிறார்கள் அதிகாரிகளுக்கு 60 வயது வரை ஆட்டம் போடலாம் அரசியல்வியாதிகளுக்கு ஐந்தாண்டுகள் மட்டுமே ஒரு சில சுளிவு நெளிவு தெரிந்த கலைஞர்கள் 30 வருடம் தாக்குப் பிடிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Gajageswari - mumbai,இந்தியா
18-ஜூலை-201906:31:43 IST Report Abuse
Gajageswari தவறு செய்யும் அதிகாரிகள் குறைய வில்லை . மாறாக தவறு செய்யும் அதிகாரிகளை கண்டுகொள்வதில்லை என்பதை உண்மை
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
17-ஜூலை-201923:54:48 IST Report Abuse
spr "20 சி.பி.ஐ.,வழக்குகளில் 26 அதிகாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் தண்டனை பெற்றுள்ளனர். இரண்டு வழக்குகளில் கோர்ட் உத்தரவின்படி அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" இதுவரை எந்த செய்தித்தாளிலும் வெளியாகாத செய்தி வியப்பாக உள்ளது அவர்கள் எவரும் இதுவரை புத்தகம் வெளியிட்டு மத்திய அரசை இக்கட்டில் வைக்கவில்லையே எனவே இது உண்மையா என சந்தேகமாக இருக்கிறது அந்த அதிகாரிகளின் பெயரை வெளியிடவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X