முன் ஜாமினுக்கு தடை கோரிய வழக்கு வாத்ரா பதில் அளிக்க கூடுதல் அவகாசம்

Added : ஜூலை 17, 2019
Advertisement

புதுடில்லி,ராபர்ட் வாத்ராவின் முன் ஜாமினை ரத்து செய்யக் கோரிய, அமலாக்கத் துறையின் மனு மீது பதில் அளிக்க, டில்லி உயர் நீதிமன்றத்தில், வாத்ரா தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது.பணப் பரிமாற்ற மோசடிகாங்கிரஸ் மூத்த தலைவர், சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ரா, 50, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர், லண்டனில், பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளை வாங்கினார்.

இந்த விவகாரத்தில், பணப் பரிமாற்ற மோசடியில் அவர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை, அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, வாத்ரா கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது. இதையடுத்து, டில்லி நீதிமன்றத்தில், வாத்ரா தரப்பில், முன் ஜாமின் கோரப்பட்டது.அவருக்கு, ஏப்., 1ல், டில்லி நீதிமன்றம், முன் ஜாமின் வழங்கியது. மேலும், இந்த முன் ஜாமின் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கு, அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.ராபர்ட் வாத்ரா, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்பதால், டில்லி நீதிமன்றம் வழங்கிய முன் ஜாமின் மனுவை ரத்து செய்யுமாறு, அமலாக்கத் துறை சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரண்டு வாரம்இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பாக, பதில் அளிக்குமாறு, வாத்ராவுக்கு உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'முன் ஜாமின் ரத்து தொடர்பாக, பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டபோது, வாத்ரா வெளிநாடு சென்றிருந்தார்.'அவர், 11ல் தான் நாடு திரும்பினார். எனவே, பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை' என, வாத்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்ற டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி, சந்திரசேகர், வாத்ராவுக்கு இரண்டு வாரம் அவகாசம் அளித்து, வழக்கை ஒத்தி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X