அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'நீட்' விலக்கு மசோதா விவகாரம் :
சட்டசபையில் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: ''நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் கேட்டு, மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்புவோம். அதற்கும் பதில் வரவில்லை என்றால், சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டி முடிவெடுப்போம்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.

நீட் விலக்கு, மசோதா, சட்டசபை, சிறப்பு கூட்டம், தீர்மானம்

சட்டசபையில், நேற்று கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:


எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின்: மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரி, இரண்டு மசோதாக்களை, சட்டசபையில் நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி னோம்.'அவற்றை, 2017 செப்., 22 அன்றே திருப்பி அனுப்பி விட்டோம்' என, மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலர், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி நிராகரிக்கும் மசோதாக்களை, மீண்டும், ஆறு மாதங்களுக்குள், சட்டசபையில் நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதல் பெற முடியும். இந்த அதிகாரத்தை, அரசு பயன்படுத்த வில்லை. மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு,

21 மாதங்களுக்கு மேலாகி உள்ளன.திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை கேட்டிருப்பதாக, சட்ட அமைச்சர் தெரிவித்தார்.சட்டசபைக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்த தவறி விட்டீர்கள்.எனவே, சட்ட சபையில், மீண்டும் புதிதாக, இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்புவீர்களா?
அமைச்சர், சி.வி.சண்முகம்: மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவல் கிடைத்ததும், காரணம் கேட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம்; இது நாள் வரை, பதில் வரவில்லை. இதுவரை, 12 கடிதங் களை எழுதி உள்ளோம்.எதற்கும் பதில் தர வில்லை. இதுவரை, மத்திய அரசு, மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தையும் தெரி விக்கவில்லை. பதில் வந்ததும், குறைகளை சரி செய்து, மீண்டும் மசோதாவை நிறைவேற்றலாம்.தற்போது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி, நீதிமன்றம் வழியே மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்போம். இதற்காக, வழக்கு தொடர அரசுதயங்காது.


ஸ்டாலின்: நடந்தது நடந்ததாக இருக்கட்டும். மாண வர்களின் வாழ்வாதார பிரச்னை என்பதால், இந்த கூட்ட தொடரிலேயே, மீண்டும் மசோதாக் களை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்புவோம்.

Advertisement

அமைச்சர், சி.வி.சண்முகம்: காரணம் தெரியாமல், அதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், மீண்டும் நிராகரிப் பர். எனவே, காரணத்தை அறிந்து செயல்படு வோம். காரணத்தை சொல்ல வேண்டியது, அவர்கள் கடமை.முதல்வர்: இது, உணர்வுப்பூர்வமான பிரச்னை. ஒவ்வொரு முறையும், பிரதமரை சந்திக்கும் போது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மனு கொடுத்துள்ளோம்.மசோதாவை நிராகரித்த தற்கான காரணம் தெரிந்தால், அதை சரி செய்ய முடியும். அதைத் தான் அமைச்சர் கூறுகிறார்.


மத்திய அரசுக்கு மீண்டும், ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்புவோம். அதற்கும் பதில் வர வில்லை என்றால், சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி முடிவெடுப்போம். மாணவர் கள் நலன் மீது, உங்களுக்கு எப்படி அக்கறை உள்ளதோ, அதேபோல், எங்களுக்கும் உள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
18-ஜூலை-201921:31:48 IST Report Abuse

konankiமாணவர்கள் வாழ்வாதார பிரச்சினை இல்லை. ஓரு மருத்துவ சீட் ஒரு கோடி ரூபாய் என்று விற்பனை செய்யும் கொள்ளகாரர்களுக்கு தான் இவர் ஆதரவு.ஆனால் மாணவர்கள்களுக்கு என்ற மூகமுடியில் தனியார் மருத்துவ கல்லூரி கொள்ள காரர்கள் சார்பாக சட்ட மன்ற தொடரில் தொடர்ந்து போராடும் இந்த ஊழல் திலகத்தின் முகத்திரை கிழிக்க வேண்டும்.

Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
18-ஜூலை-201921:27:56 IST Report Abuse

Poongavoor RaghupathyTamilnadu Politicians must protest also against elimination of Entrance test for IIT entry as well as entrance exams for IIMs. This can be asked only to exempt Tamilnadu students and many Students and Parents in Tamilnadu will vote for DMK. The Policy should be- NO EXAMS FOR -IIT-NEET and IIM. How Tamilnadu Politicians are fooling Tamilnadu for their Political gains is clearly known to the world.

Rate this:
s t rajan - chennai,இந்தியா
18-ஜூலை-201920:31:32 IST Report Abuse

s t rajanஅரசியல் வ்யாதிகள் யாவரும் தனியார் மருத்துவக் கல்லூரி நடத்தி கொள்ளை யடித்து ஏழை மாணவர்கள் மருததுவம் படிக்க இயலாமல் செய்வதை நீட் தடை செய்கிறது. அதனால் கோணி கோணியாக கோடிகளை சுருட்டிப் பதுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நன்கு தெரிகிறது. மக்களாகிய நாங்கள் எதிர்க்காத நீட் முறையை நீங்கள் ஏனய்யா எதிர்க்கிறீர்கள். நீட் உங்கள் கொள்ளைக்கு சாவு மணி அடித்து விட்டது.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X